பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1025

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spondylitis

1024

sporicidal


spondylitis : தண்டுவட எலும்பு அழற்சி; முதுகெலும்பு அழற்சி : தண்டெலும்பின் (முள்ளெலும்பு) ஒன்று அதற்கு மேற்பட்ட கண்ணிகளில் வீக்கம் உண்டாதல்.

spondy lizema : முதுகெலும்பு இறக்கம் : கீழுள்ள எலும்பு தேய்ந்த ழிந்து விட்டதால் கீழ்நோக்கி இடம் விலகிய முதுகெலும்பு.

spondylolisthesis : முதுகெலும்பு முன் சாய்வு; முதுகெலும்பு முன் பிறழ்வு; முள்ளெலும்பு நழுவல் : வயிற்றுப் பக்க முதுகெலும்பு முன் புறமாக இடம் பெயர்ந்திருத்தல்.

spondylolysis : முதுகெலும்புக் குறை : முதுகெலும்பின் மூட்டிடைப் பகுதிக் குறைபாடு.

spondylopyosis : சீழ்முதுகெலும்பு : ஒன்று அல்லது அதிக முதுகெலும்பு உடலங்கள் சீழ்பிடித்தல்.

spondyloschisis : முதுகெலும்புப் பிளவு : ஒன்று அல்லது மேற்பட்ட முதுகெலும்பு வளைவுகளில் பிறவிப் பிளவு.

spondydosis : முதுகெலும்புப் பிடிப்பு : 1. முதுகெலும்பு முட்டுப்பிடிப்பு 2 முதுகெலும்பின், ஒரு திசு அழிவு பாதிப்பு.

spondylosis deformans : தண்டுவட எலும்பு வீக்கம் : முதுகெலும்பு இடைத்தகடு நலிவுற்று, அத்தகட்டின் சுற்று விளிம்பில் புதிய எலும்பு உருவாதல், இது பொதுவாக தண்டுவட எலும்பு வீக்கம் எனப்படும்.

spondylotomy : முதுகெலும்பு முறித்தல்.

sponge : உறிஞ்சு பொருள் : 1. நுண்கண் கொண்ட உறிஞ்சு பொருள். 2.சில நீர் வாழ் பிராணிகளின் உயிரணு உள்கூடு.

spondioblastoma multiforme : உக்கிர மூளைக்கட்டி : மிகவும் உக்கிரமுடைய விரைவாக வளரக்கூடிய மூளைக்கட்டி.

spondioplasm : பஞ்சுப்பாய்மம் : உயிரணுப் பொருளில் நுண்ணிழைகளின் வலையமைப்பு.

spongiosaplasty : உறிஞ்சிச் சீரமைப்பு : உறிஞ்சித் திசுவின் தன் சீரமைப்பால் புது எலும்பு உருவாகத் துணை செய்தல்.

spongiositis : உறிஞ்சித் திசுவழற்சி : ஆண் குறியின் உறிஞ் சிப்பிழம்பு அல்லது குடைவுப் பிழம்பு அழற்சி.

spore : கருவணு; சிதல் : கரு மூலம் விதை மூலம், விதை புது உயிராக வளரத்தக்க உயிர்ம நுண்மம்.

sporicidal : கருவணுக் கொல்லி : கருவணுவைக் கொல்லக்கூடிய