பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1026

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sporogenesis

1025

sprue


sporogenesis : கருவணு உருவாக்கம் : கருவியல் நுண்மம் உருவாதல்.

sporoblast : கருவணு மூலம் : கருவணுவாக மாறுவதற்கு முன் கருவணுநீர்ப்பையாக ஆரம்ப நிலையில் வளர்தல்.

sporocyst : கருவணு நீர்ப்பை : 1. இனப்பெருக்க அணுக்களை கருவணுக்கள் கொண்ட நீர்ப்பை. 2. ஒட்டுயிர்புழுவின் வாழ்வுச்சுழலின் முதல் இடை ஏற்புயிரில் கருமுலை அணுக்கள் கொண்ட கரு மூல அணுப்பை. 3. முட்டை நீர்ப்பைக்குள்ள ஓரணு உயிர்களின் சிலவற்றின் வாழ்க்கைச் சுழலில் ஒரு நிலை.

sporogony : கருமூல அணுவாக்கம் : கருமூல ஒருயிரணுவில் கரு மூலவணு உருவாதல். கருவணுவுக்குள் பாலினமல்லாப் பிளவு.

sporoplasm : கருமூலக்கணியம் : கருமூல அணுக்களின் முன் கணியம்.

Sporothrix : ஸ்போரோதிரிக்ஸ் : பூஞ்சானப் புண்ணுண்டாக்கும் ஸ்போரோரைக்கம் சென்ஸ்கி உள்ளிட்ட பூஞ்சைக்காளானினம்.

sporotrichosis : பூஞ்சணப்புண் : ஒரு காயத்தில் பூஞ்சணம் படையெடுத்தல்.

sporule : சிறுகருவணு : சிறிய கருவியலணு.

sporulation : கருவணுநோய் நுண்மம் : கருவணுநோய் பாக்டீரியாக்கள் உருவாதல்.

spotted fever : மூளை அழற்சி சன்னி; புள்ளிக்காய்ச்சல் : மூளை அழற்சிச்சன்னி நோய். இது கொள்ளை நோயாகப் பரவக் கூடியது.

spue : கக்கல்.

sprain : சுளுக்கு சுளுக்குவீக்கம்); தசைப்பிறழ்ச்சி; பிசகு : ஒரு மூட் டினைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் ஏற்படும் காயத்தினால் உண்டாகும் வீக்கம். இதனால், நிறமாற்றம், வீக்கம், வலி உண்டாகும்.

sprengel's shoulder deformity : ஸ்பிரெங்கல் தோள் திரிபு : பிறவியிலேயே தோள் திரிபடைந்து, தோள்பட்டை திரிபடைந்து, தோள்பட்டை நிரந்தரமாக அளவுக்கு மீறி உயர்ந்திருத்தல். இது பிறவி உறுப்புச் சீர்கேடுகளுடன் தொடர்பு உடையது. எ-டு: கழுத்துப் பக்க விலா எலும்பு இருத்தல் அல்லது முள்ளெலும்பு இல்லாதிருத்தல்.

sprue : தொண்டை நோய்; செரியா சீதபேதி : வெப்ப மண்டலத் தொண்டை நோய். நாக்கு அழற்சி, செரியாமை, உடல் நலிவு, குருதிச்சோகை, கொழுப்பு