பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1050

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sulphamethazine

1049

sulphur


மாகப் பயன்படுத்தப்படும் ஒரு சல்ஃபோனாமைடு.

sulphamethazine : சல்ஃபாமெத்தாசின் : குழந்தை மருத்துவத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப் படும் சல்ஃபாடிமிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

sulphamethizole : சல்ஃமா மெத்திசோல் : சிறுநீர்க்குழாய் கோளாறுகளில் பெரிதும் பயன்படும் சல்ஃபோனாமைடு.

sulphaemoglobin : சல்ஃப்ஹீமோகுளோபின் : ஹைட்ரேஜன் சல்ஃபைடு மற்றும் ஃபெர்ரிக் நிலை இரும்பும் சேர்வதால் உண்டாகும் பல்கூட்டுப் பொரு ளான சல்ஃப்மெட்ஹீமோ குளோபின்.

sulphamethoxazole : டிரைமெதாப்ரினுடன் : டிரைமெதாப்ரினுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் சல்ஃபானமைடு தயாரிப்பு.

sulphasalazine : சல்ஃபாசாலசின் : குடல் அழற்சியைக் குணப்படுத்தப் பயன்படும் ஒரு சல்ஃபோனா மைடு மருந்து.

sulphobrom opthalein : சல்ஃபோபுரோமோஃப்தவீன் : கல்லீரல் இயக்கச் சோதனைக்குப் பயன்படும், கந்தகம் மற்றும் ரோமின் சேர்ந்த கூட்டுப் பொருள்.

sulphonamides : சல்ஃபோனாமைடுகள் : நோய்க் கிருமிகளைக் கொல்லும் வேதியியல் பொருள்களின் தொகுதி. இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இவை இரத்தத்தில் குறிப்பிட்ட அளவு செறிந்திருக்க வேண்டும். இவை வளர்சிதை மாற்றத்தை எதிர்க்கக் கூடியவை. ஃபோலிக் அமிலம் உருவாவதை இவை தடுக்கின்றன.

sulphones : சல்ஃபோன்கள் : டாப்சோன் போன்ற செயற்கை மருந்துகளின் ஒரு தொகுதி, தொழு நோய்க்கு இவை பயன்படுகின்றன.

sulphonylureas : சல்ஃபோனிலூரியாக்கள் : சல்ஃபோனாமைடு வழிப்பொருள்கள் கணையத்திலிருந்து கணையநீர் (இன்சுலின்) சுரப்பதை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில் கணையநீர் ஊசி போடுவதைத் தேவையற்ற தாக்குகிறது.

sulphur : கந்தகம் : கரையாத மஞ்சள் நிறத் தூள். ஒரு காலத்தில் சொறி சிரங்குக்குக் கந்தகச் சிரங்குக்குக் கந்தகக் களிம்பு மருந்தாகப் பயன் பட்டது. இன்றும் முகப்பரு போன்ற தோல் நோய்களுக்குக் கழுவுநீர்மங் களில் பயன்படுத் தப்படுகிறது.