பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1056

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

suturing tech...

1055

sweet's syn...


மருத்துவத்துக்குப்பின் தையலிடுதல், மண்டையோட்டுப் பொருத்துவாய், எலும்புப் பொருத்துவாய்.

suturing technique : தையல் நுட்பம்.

suxamethonium : சக்ஸாமெத்தோனியம் : சிறிது காலமே செயல்படும் முனைப்படு நீக்கி தசைத் தளர்த்தி.

svedberg : ஸ்வெட்பெர்க் அளவு : ஸ்வீடன் நாட்டு வேதியியலாரும் நோபல் பரிசு பெற்ற வருமான தியோடார் ஸ்வெட்பெர் பெயராலமைந்து படிவுத் திறனளவு. இது மையவிலகல் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

swab : பஞ்சுத் துடைப்பான்; ஒற்றி; சுருணை; துடைப்பி : அறுவை மருத்துவத்தில் பயன் படுத்தப்படும் உறிஞ்சு பஞ்சுத் துடைப்புத் துண்டு.

swage : 1. ஒரு பகுதியில் குறிப்பாக உள்ள உலோகத்தை வடிவமைத்து அழுந்தப் பொருத்துகிற, 2. ஒரு தையல் பொருளை ஊசிக்குள் பொருத்தல்.

swallow : விழுங்கு : ஒரு பொருளை வாயிலிருந்து வாய் பின்புழை தொண்டை, உணவுக் குழல் வழியாக வயிற்றுக்குள் அனுப்புதல்.

swallowing : விழுங்குதல் : உணவுப் பொருள் வாயிலிருந்து தொண்டை, உணவுக்குழல் வழியாக இரைப்பைக்குச் செல்லும் இயக்கத்தை செயல்படுத்தும் முதலில் விருப்பச் செயலாகத் துவங்கி அனிச்சைச் செயலாக முடியும் பலபடி நிலைகள் கொண்ட இயக்கம்.

swan-neck : வாத்துக் கழுத்து : தசைத் தொனியழிவு நோயில், தசையழிவின் காரணமாக விளைவான் மெல்லிய வளைந்த கழுத்து.

Swarning : மொய்த்தல் : ஒரு வளர்ம ஊடகத்தில் நுண்ணுயிர்கள் பரவியிருக்கும் நிலை.

sweat : வியர்வை : வியர்வைச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் சுரப்பு நீர்.

sweat duct : வியர்வை நாளம்.

sweat gland : வியர்வைச் சுரப்பி.

sweating : வியர்த்தல்.

sweating leath : வியர்வைக் குளியல் : வியர்வை ஏற்படுவதற்காக மேற்கொள்ளும் குளியல்.

sweating-room : வியர்பறை : வியர்வையை ஏற்படுத்தக்கூடிய அறை.

sweat test : வியர்வைச்சோதனை.

sweet's syndrome : ஸ்வீட்(நோயியம்) நோய்க் குறித் தொகுதி : காய்ச்சல், முகம்,