பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1067

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



T

T : ஆங்கிலஎழுத்து டீ : வெப்ப நிலைக்கான குறியீடு. கட்டி என்ற பொருள்படும் டியூமர் என்ற ஆங்கிலச் சொற்களின் சுருக்கக் குறியீடு.

'T-disease : டீ வியாதி : தாலசீமியா.

TAA : கட்டியுடன் தொடர்புடைய விளைவியம் (காப்பு மூலம்).

TAB : நச்சுக் காய்ச்சல் தடை மருந்து : நச்சுக்காய்ச்சல் (டைபாய்டு), குடற்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக மனிதரிடம் செயற்கையாக நோய் தடைக்காப்பினை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் அம்மைப்பால் மருந்து.

tabacosis : புகையிலை ஒவ்வாமை : புகையிலை தூசுக்கு தொழில்வழி ஆட்படுவதால் ஏற்படும் வெளிப்பொருள் ஒவ்வாவளி நுண்ணறையழற்சி.

tabaeism : புகையிலை நஞ்சூட்டம் : புகையிலையை அளவுக்கு அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நஞ்சு விளைவுகள்.

tabanus : குருதிக்குடிபூச்சி : டிரிப்பனோசோம்களை பரப்பும் குருதி உறிஞ்சிக் கடிக்கும் பூச்சிகள்.

tabatiere anatomique : பொடிடப்பியுறு உடற்கூறு : பெருவிரலின் அடிப்பகுதியின் கையின் புறப்பகுதியிலுள்ள முக்கோண வடிவப் பரப்பு. பெருவிரலை நீட்டும் போது, பெருவிரல் நீட்டிக்குறும், நெடும் தசை நார்கள் எல்லை அமைந்த பள்ளமான தோற்றம்.

tabes : மிகுமெலிவு (சோகை); உடல் திசு அழிவு நோய் : முள் ளந்தண்டு மெலிவுறும் நோய். இதில் உணர்வு நரம்புகளும் நோயுற்று கைகால்கள் விளங்காக் கோளாறு உண்டாகும்.

tabescence : உடல்வற்றியுலர்தல் : உடல் மெலிவுக் கோளாறு.

tabetic : நலிவிய; மெலிவிய : நலிவு நோய் தொடர்பான தீவிர நலிவு நிலையில் திரும்ப வரும் தீவிர வலி அல்லது தண்டுவட நலிவு நோயில் திடீர் வெளிப்பாடுகளாக நடை பாதிப்பு அடியெடுத்து நடைக்குக் காரணமான நலிந்த முறுக்கிய காலடி (தாள்).

tabic : உடல் மெலிவுக் கோளாறு உடைய.