பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1068

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tablet

1067

taedium vitae


tablet : மாத்திரை பொதி குளிகை

taboparesis : தண்டுவட அழற்சி : மூளைக் கோளாறுடையவர் களுக்குப் பொதுவாக ஏற்படும் வாதநிலை. இதில், தண்டுவடத்தில், முள்ளந்தண்டு அழற்சி ஏற்படுவது போன்று நைவுப் புண்கள் உண்டாகும்.

tabus : கணுக்கால்; கணுக்கால் எலுமபு.

tachyarrhythmia : வேகநாடி லயக் கோளாறு : வேகமான நாடித் தடிப்புடன் ஒழுங்கற்ற இதய இயக்கம்.

tachycardia : இதயத்துடிதுடிப்பு; மிகை இதயத்துடிப்பு; இதய விளைவு : இதயத் துடிப்புத் திடீரென அதிவேகமாகத் துடிக்கும் கோளாறு.

tachylolia : விரைவுப் பேச்சு.

tachyphasia : அதிவேகப் பேச்சு, பேச்சு மிகைப்பு; பேச்சு விரைவு : சில உளவியல் கோளாறுகளின் போது மிக அதிவேகத்தில் பேச்சு வெளிப்படுதல்.

tachyphylaxis : வேகநோய்காப்பு : ஒரு பொருளின் நச்சளவுகளின் விளைவுகளிலிருந்து விரைந்து ஏமக்காப்பு நிகழ்தல். திரும்பத்திரும்பக் கொடுப்பதால் சில மருந்துகள் செயல்திறனில் பெருமளவு குறை.

tachypnoea : அதிவேக மூச்சு; மிகை மூச்சு; மூச்சு விரைவு : மூச்சு வாங்குதல் இயல்புக்கு மீறி வேகமாக நடைபெறுதல்.

tachysterol : டெக்கிஸ்டீரால் : மீஊதாக் கதிர்த் தாக்கத்தால் எர்கோ ஸ்டீராலினின்றும் உருவாகும் எர்கோஸ்டீராலின் ஒரகச் சீர்மங்களில் ஒன்று.

tactile : தொடு உணர்வு சார்ந்த; தொடுவுணர்வு : தொட்டு உணரக்கூடிய ஊறுணர்வுப் புலன் சார்ந்த.

tactoid : படிகப்போலி : எஸ்ஹீ மோகுளோபின் ஆக்ஸிஜன் இழந்து, ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் பல்படியாகும் போது உருவாகும் படிகப் போலியமைப்பு.

tactometer : தொடுவுணர்விமானி : தொடுவுணர்வின் கூர்மையை அளந்தறியும் கருவி.

tadpole sign : தலைப்பிரட்டை அறிகுறி : ஒரு புற்றுக்கட்டிக்கு நேர்கீழ் இடம்பெற்றுள்ள காற்புள்ளி வடிவ உருப்படிவம். ஒலி வரைவில் குறைவான அடர்த்தி உள்ள அது அழிந்த திசுவுடன் தொடர்புடையது.

taedium vitae : வாழ்க்கை வெறுப்புணர்ச்சி : தற்கொலை புரியத்துண்டும் வாழ்க்கை வெறுப்பு.