பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1069

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

taenia

1068

tampon


taenia : 1. குடற்புழு; நாடாப்புழு : தட்டையான ஒட்டுண்ணிக் குடற்புழு வகை. 2. மூளையின் இழைக் கச்சை போன்ற பகுதி.

taeniacide : குடற்புழு மருந்து; நாடாப்புழுக்கொல்லி : குடற் புழுக்களைக்கொல்லும் மருந்து.

taeniafuge : குடற்புழு வெளியேற்று மருந்து; நாடாப் புழுவகற்சி : குடற்புழுவை வெளியேற்றும் மருந்து.

tail : வால் : உடற்பகுதியின் பின் முனையிலிருந்து நீளும் ஒல்லி யான பின்தொங்கல்.

Takayasu's disease : தக்கயாசு வியாதி : நாடிக் குறைநோய். அல்லது மகாதமனி வளைவு நோயியம். ஜப்பானிய கண் மருத்துவர் மிக்கிஷிகி தக்கயாசு பெயராலமைந்தது. மகாதமனி மற்றும் அதன் பெருங்கிளைகள் போன்ற நெகிழ் தமனிகளின் நாள்பட்ட அழற்சிக் குருணைய(எல்லா)த் தமனி முழு அழற்சி.

taic : கல்மா; வெளிமக்கன்மகி; காக்காய்ப்பொன் : இயற்கையாகக் கிடைக்கும் மக்னீசியம் சிலிக்கேட் அடங்கிய ஒரு மென்மையான வெண் னிறத்தூள். அறுவை மருத்துவத்துக்கு அணியும் கையுறைகளை அணிவதற்கு முன்பு அவற்றில் பூசிக் கொள்ளப் பயன்படுகிறது.

talcosis : தூள்நோய் : (நறு மணத்தூளை நுகர்வதால் ஏற்படும் தூசுவளி நுரையீரல் நோய்.

talipes : முடக்கால்; கோணல்கால்; பிறவிகுறுக்குக்கால் : கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல்.

talipomanus : முறுக்கியகை : இயல்பான வடிவும் நிலையும் மாறி முறுக்கியகை உருக்குறை (ஊனம்).

talus : கணுக்கால்; முட்டி எலும்பு; கணுவெலும்பு : கணுக்கால் எலும்பு. கீழ்க்கால் உள்எலும்புக்கும் குதிகால் எலும்புக்குமிடையில் அமைந்துள்ளது. இது கணுக்காலின் இரண்டாவது மிகப்பெரிய எலும்பு.

tamoxifen : டாமோக்சிஃபின் : எலும்பு உருவாவதைத் தடுக்கும் ஒரு செயற்கை கூட்டுப்பொருள். மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிந்திய மார்பகப் புற்றைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.

tampon : அடைப்பான் : குருதியொழுக்கை நிறுத்த அல்லது சுரப்புகளை உறிஞ்சிக்கொள்ளப் பயன்படும் பருத்தி நூல் கட்டு அல்லது கண்ணறைத் துணிக் கட்டு.