பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

aminoplex

106

ammonium bicarbonate


aminoplex : அமினோ ப்ளக்ஸ் : நரம்புவழி உட்செலுத்துவதற்கு உகந்த ஒரு செயற்கைத் தயாரிப்பு மருந்துப்பொருள். சாதாரணமாகப் புரதமாக உட்செலுத்தப்படும் கரிம அமிலங்களை (அமினோ அமிலங்கள்) இது கொண்டு இருக்கிறது. இது காயங்களைக் கழுவிக் குணப்படுத்தப் பயன் படுகிறது.

aminopterin : அமினோப்டெரின் : ஃபோலிக் அமில எதிர்ப்பி.

aminoquinoline : அமினோ குயினோலின் : குயினோலின் மருந்துடன் அமினோ வகை மருந்தைக் கலந்து தயாரிக்கப்படும் மருந்து வகை. இது 4 அமினோ குயினோலின் எனவும் 8 அமினோ குயினோலின் எனவும் இரு வகைப்படும். மலேரியா காய்ச்சலுக்குரிய மருந்து இது.

amino-salicylic acid : அமினோ-சாலிசிலிக் அமிலம் : காச நோயை (எலும்புருக்கி நோய்-டி.பி.) குணப்படுத்துவதற்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்து.

aminosol : அமினோசோல் : கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலாம்

amitosis : உயிரணுப் பகுப்பு; உயிரணுப்பிளவு; திசுப் பெருக்க மின்மை : ஒர் உயிரணு, நேரடிப் பிளப்பு மூலம் பகுதிகளாகப் பிரிவுறுதல்.

amitotic : பிளவுப்பெருக்கமிலா.

aminotransferase : அமினோ டிரான்ஸ்ஃபெரேஸ்.

aminodarone : அமினோடாரோன்.

aminotriptyline : அமினோட்ரிப்டிலின் : மூச்சழற்சியுடைய வலி தணிப்பு மருந்து, இது இமிப்ராமின் மருந்தினைப் போன்றது. இதில் ஒருவகை நோவாற்றும் விளைவு உண்டு. இது குழப்பத்துடன் கூடிய மனத்தளர்ச்சியின்போது மிகவும் பயன்படுகிறது.

ammonia : நவச்சார ஆவி (அம்மோனியா) : நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கூட்டுப்பொருள். மனிதர்களிடம் நவச்சார வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்து ஏற்படும் பல்வேறு பிழைபாடுகள் காரணமாக மன வளர்ச்சிக் குறைபாடு, நரம்புக் கோளாறுகள், வாத சன்னி போன்ற திடீர் நோய்ப்பீடிப்புகள் உண்டாகின்றன. நவச்சார ஆவிக் கரைசல் நிறமற்ற திரவம், கார நெடியுடையது; இது சிறுநீர்ச் சோதனையில் பயன்படுத்தப் படுகிறது.

ammonium bicarbonate : அம்மோனியம் பைகார்பனேட் :