பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1092

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

toggle

1091

tongue


toggle : கால் மூட்டுச் சில்லு : கால் மூட்டுச்சில்லுகளில் ஒன்று.

toilet : காயக்கழுவல் : 1. மகப்பேறு நோயாளியின் அல்லது அறுவைக் காயத்தைக் கழுவுதல். 2. மலம் கழிக்கும்போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது கழிவுகளை சேர்த்து அழிக்கப் பயன்படும் கருவி.

tolazoline : டோலோசோலின் : இரத்தவோட்டக் கோளாறுகளில் குருதிநாள விரிவகற்சி மருந்தாகப் பயன்படும் மருந்து.

tolbutamide : டோல்புட்டாமைடு : சல்ஃபோனாமைடுவழிப் பொருள்களில் ஒன்று. நீரிழிவு நோயில் இது கணைய நீரை (இன்சுலின்) அதிகம் வெளிக் கொணரக்கூடியது. நீரிழிவு நோயாளிகளுக்கு வாய்வழி கொடுக்கப்படுகிறது. குழந்தை நீரிழிவு நோயாளிகளுக்கு இது பயன்படாது.

tolerance : தாக்குதிறன் சகிப்பு : மருந்துகளின் எதிர் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் திறன்.

tolnaftate : டோல்னாஃப்டேட் : பூஞ்சண எதிர்ப்பு மருந்து. விளையாட்டு வீரர் பாத நோய்க்குப் பயன்படுகிறது.

tomatidine : வீரிய ஊக்குச் சத்தாகப் பயன்படும் தக்காளிச்சத்து.

tomatin : தக்காளிச்சத்து : தக்காளிச் சத்து மருந்து.

tomentum : மூளைக்குச்சம் : மூளையின் சுழிமுனைக் குச்சம்.

tomogram : தளவரைபடம் : உடலின் ஒரு குறிப்பிட்ட அடுக்கின் எக்ஸ்ரே கதிர்ப்படம்.

tomograph : தளவரைவி : தள வரைபடம் தரும் எக்ஸ்ரே கருவி.

tomography : தளவரைவு : உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம்.

tone : இயல்பு மனநிலை; வலிமை : மனதில் இயல்பான ஆரோக்கி யமான நிலை நாதம்-ஒலியின் தன்மை.

tongs : குறடுகள் : இடுக்கி ஒர கீலிணைப்பில் சேரும் இரு குறுடுகள் கொண்ட கருவி.

tongue : நாக்கு; நா : வாயிலுள்ள அசையக்கூடிய தசை உறுப்பு பேசுதல், மெல்லுதல்,