பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1093

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tongue-bone

1092

tonsil


விழுங்குதல் சுவை ஆகியவற்றோடு தொடர்புடையது.

tongue-bone : வளைந்த நாவடி எலும்பு.

tongue tacked : பேசவியலா; தெற்றுதலுள்ள.

tongue-tie : தெற்றுநா : நாநரம்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறு நரம்பால் விளையும் பேச்சுத்தடை.

tonic : 1. சத்து மருந்து; உரமான; தெம்பூட்டி : உரமூட்டி வலிமை பெருக்குகிற மருந்து, 2. தொடர் தசைச் சுருக்கம் தொடர்ச்சியான தசைச் சுருக்க நிலை. இது இடையிடை ஏற்படும் தசைச் சுருக்கத்திற்கு மாறுபட்டது.

tonicity : தசைநெகிழ்வு : தசையின் நெகிழ்வுத்திறன்.

tonography : அழுத்த அளவீடு; அழுத்த வரைவியல் : இரத்தத்தின் அல்லது உள்கருவிழி அழுத்தத்தை தொடர்ந்து அளவிடுதல்.

tonometer : தொனொமானி; தொனி அழுத்தமானி : குரல்விசைமானி.

tonometry : அழுத்தமானி : கண் உள் அழுத்தம் போன்ற கண் ணுக்குள் உள்ள நீரின் அழுத்தத்தை அளத்தல், தொனியின் அலை வெண்களை அளத்தல்.

tonsil : அடிநாச்சதை : தொண்டைச் சதை : 1. தொண்டையின்