பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1096

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

total lung...

1095

toxicology


ஒரு செயற்கை மூட்டைப் பொருத்தும் முறை.

total lung capacity : நுரையீரல் முழுக்கொள்ளவு (டீ.எல்.சி) : மிகவும் தீவிரமாக மூச்சை உள்ளிழுத்த பின் நுரையீரலில் உள்ள காற்றின் மொத்த கொள்ளளவு. அதில் நான்கு பகுதிகள் உள்ளன. மூச்சுயிர்ப்பு அளவு, உள்ளேற்பு உள்ளிருப்பளவு, வெளியேற்ற இருப்பளவு மற்றும் இருப்பளவு ஆகியவை.

Total Parenteral Nutrition (TPN) : முழுச் சிரைவழி உணவூட்டம் : இன்றியமையாத ஊட்டச் சத்துப்பொருள்கள் அனைத்தும் அடங்கியுள்ள கரைசல்கள். ஒரு மைய நாளம் வழியாகச் செலுத்தப்படுகிறது. திரவங் களும் குறைந்த அடர்த்தியுள்ள கரைசல்களும் மட்டுமே செலுத்தப்படுகின்றன.

totalpulpits : முழுப்பற்கூழ்அழற்சி.

totipotent : முழு ஆற்றலுடைய : ஒரு பகுதியின் எந்த வகையிலும் வளரக்கூடிய திறமை. எந்த வகை உயிரணுவாகவும் மாறி உருவாகும் ஆற்றல் பெற்ற உயிரணு.

touch : தொடல் : தொடு உணர் வால் அறிதல், கைகளால் உணர்தல்.

toucheurism : தொடு பாலுணர்வு : எதிர் பாலினத்தவரை தொடுவதன் மூலம் பாலுணர்வை திருப்திப்படுத்தல்.

tourniquet : குருதித் தடுப்புக் கருவி; இறுக்கக் கயிறு இறுகுக் கட்டு : அழுத்திப் பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்தும் கருவி.

toxaemia : குருதி நச்சூட்டு; நச்சுக் குருதி : பாக்டீரியா அல்லது சேத மடைந்த திசுக்களின் பொருள்களினால் உடல் முழுவதும் நஞ்சேறுதல்.

toxic : நஞ்சேறிய; நச்சுப் பண்பு : ஒரு நஞ்சினால் உண்டான நச்சுத் தன்மையுடைய.

toxic ambylopia : பார்வைச் சுருக்கம் : நஞ்சினால் பார்வைப் பரப்பு சுருங்குதல்.

toxic anaemia : நச்சுக் குருதிச் சோகை.

toxic epilepsy : நச்சுக் காக்காய் வலிப்பு.

toxication : நச்சூட்டுதல்.

toxicity : நஞ்சியல்பு : நச்சுத் தன்மையின் அளவு.

toxicity test : நோய் நஞ்சு சோதனை.

toxicology : நச்சூட்டவியல்; நச்சுயியல் : நஞ்சுகள், அவை வினை புரியும்விதம்,அவற்றை எதிர்க்கும் பொருள்கள் பற்றி ஆராயும் அறிவியல்.