பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1097

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

toxicomania

1096

toxicology


toxicomania : நஞ்சார்வ நோய்; நச்சு வெறி : தனிமனிதருக்கு அல்லது சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் மருந்தினை மீண்டும் மீண்டும் உட்கொள்ள வேண்டும் என்று ஏற்படும் போதையுணர்வு. இந்த நோய் கண்டவர்கள் இவ்வகை மருந்துகளை எப்படியும் வாங்க வேண்டும் என்ற வேட்கையுடனிருப்பார்கள்.

toxicophobia : நச்சூட்டக் கோளாறு.

toxicosis : நஞ்சமைவு : ஒரு நஞ்சின் இயக்கத்தால் உண்டாகும் கோளாறு.

toxin : நோய் நஞ்சு (டாக்சின்); நுண்ணுயிர் நச்சு : நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள். உயிரணுக்களை அழிக்கிற அல்லது சேதப்படுத்துகிற நச்சுப்பொருள்.

toxocara : வட்டப்புழு : பூனை, நாய் போன்ற பிராணிகளிடம் உள்ள ஒரு வகை புழு. இப் பிராணிகளைத் தொட்ட கையினால் உணவு உண்பதால் மனிதருக்கும் இது பரவுகிறது. இது நுரையீரலையும், கண்களையும் பாதிக்கிறது.

toxocariasis : டாக்ஸோகாரியாசிஸ் : நாய்களின் குடல்களில் இயற்கையாக வாழும் டாக்ஸோகாரா இனம் சேர்ந்த உருண்டைப் புழுக்களின் கூட்டுப் புழுப்பற்றுகை.

toxoid : முறித்த நஞ்சு; நச்செதிர் ஊநீர்; நச்சணையம் : நச்சுத் தன்மை நீக்கப்பட்ட ஒரு நோய் நஞ்சு. எனினும், இதில் அதன் காப்பு மூலப் பண்பு எஞ்சி இருக்கும். இது, பல நோய் நச்சுக்களுக்கு எதிராக ஏமத் திறனை அதிகப்படுத்த நோயின் போது அம்மைப்பால் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

toxoplasma : நோய் நுண்ணுயிரி : நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இவை உயிரணுக்களுக்குள் புகுந்த நோய் ஏற்படுத் துகின்றன. இந்த ஓரணு உயிர் மனிதரிடமும், விலங்குகளிடமும் நுழைந்து “எய்ட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயாளிகளைக் கொன்று விடுகின்றன: கருவிலுள்ள குழந்தைகளை ஊனப்படுத்துகின்றன.

toxamin : ஊட்ட எதிர்பொருள் : வைட்டமின் எதிர்ப்புப் பொருள். இது வைட்டமின் செயற்படுவதைத் தடுக்கிறது. எடுத்துக்கட்டாக, முட்டை யிலுள்ள வெண்கரு, "பி" குழும வைட்டமின்களுடன் இணைந்து, அவை உடலின் மீது வினைபுரிவதைத் தடுக்கிறது.

toxicology : நச்சுட்ட ஆய்வியல்; நச்சுயியல் : நஞ்சுகள் பற்றி ஆராயும் அறிவியல்.