பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tyrosine

1116

tyrotoxicon


வைட்டமின் 'டி'க்கு கட்டுப்படாத ரிக்கெட்ஸ் ஆகியவை உள்ள பரம்பரை நிலை.

tyrosine : டைரோசின் : வளர்ச்சிக்குத் தேவையான இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று. இது அயோடினுடன் இணைந்து தைராக்சின் உருவாகிறது.

tyrosinosis : சிறுநீர் டைரோசிசின் : டைரோசினோசின் இயல்புக்கு மீறி வளர்சிதை மாற்றமடைவதால் சிறுநீரில் பாரா ஹைட் ராக்சிஃபினில் பைருவிக் அமிலம் அளவுக்கு அதிகமாக வெளியேறுதல்.

tyrosinuria : சிறுநீரில்டைரோசின் : சிறுநீரில் டைரோசின் வெளி யாதல்.

tyrothricin : நுண்ம நாசினி நோய் : நுண்மங்களைக் கொல்லும் ஒரு கலவை மருந்து பல்வேறு தோல் நோய்களுக்கு இது பயன்படுகிறது.

tyrotoxicon : பாலழிம்பு : பால் அல்லது பாலாடையில் ஏற்படும் அழிபொருள்.