பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



U

Uchlinger disease : உச்லிங்கர் நோய் : தடித்தோலுடன் பொது மிகையெலும்பாக்கல் நோய்.

ulcer : அழற்சிப் புண் : தோலில் அல்லது வயிற்றில் அல்லது வாயில் இருக்கும் ஒரு சவ்வில் ஏற்பட்டு, விரைவில் ஆறாதிருக்கிற அழற்சிப் புண்.

ulceration : அழற்சிப்புண்ணாதல்.

ulcerative : அழற்சிப்புண் சார்ந்த : அழற்சிப் புண் தொடர்புடைய, குழிப்புண் தன்மையுடைய.

uncertativecolitis : பெருங்குடல் அழற்சி.

ulcerogangrenous : புண்ணழுகல் : அழுகிய திசுக்களைக் கொண்ட புண்.

ulcerogenic : அழற்சி உண்டாக்கும் : அழற்சிப் புண் உண்டாக் கக்கூடிய.

ulceromembranous : புண்சவ்வு : புண்ணாதல் மற்றும் சவ்வு வெளிப்பாடு.

ulcervulva : பிறப்பு வாயில் புண்.

ulectomy : தழும்பு நீக்கம் : அழுத்தத்தைக் குறைக்க தழும்புத் திசுவை வெட்டியெடுத்தல்.

ulemorrhagia : ஈறுகுருதியொழுக்கு : ஈறுகளிலிருந்து குருதி யொழுகுதல்.

ulerythema : செந்தழும்பு : தழும்புகளும், நலிவுத்திசுவும் உண்டாகும் தோலின் செம்படை நோய்.

ulitis : ஈறழற்சி; ஈறுவீக்கம் : ஈறுகளின் அழற்சி.

ullem : பசியிலாத்தன்மை.

Ullmann's line : உல்மான்கோடு : முதல் திரிக முள்ளெலும்புபின் முன் ஒரத்திலிருந்த ஒரு கோட்டை திரிக மேற்பரப்புக்கு நேர்கோணத்தில் மேல் நீட்டும் போது அது கடைசி புடை முள்ளெலும்பின் வழியாக செல்கிறது. இது முள்ளெலும்பு முன் நழுவில் நிகழ்கிறது. ஹங்கேரிய அறுவை மருத்துவர் எமெரிக் உல்மான் பெயர் கொண்டது.

ulna : அடிமுழ எலும்பு; முன் கை எலும்பு : முன்கையின் இரு எலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு. இது கையின்