பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ureter

1026

ureterocolo...


வடிவில் தயாரிக்கப்படும் முதல் நொதி.

ureter : சிறுநீர்க்குழல் : சிறுநீரக வட்டிலிலிருந்து சிறுநீரை

சிறுநீர்ப்பையின் அடிப்புறம் கொண்டு செல்லும் நீண்ட மெல்லிய தசைக் குழல்கள் இரண்டில் ஒன்று. 28-34 செ.மீ. நீளமும், 1 மி.மீ முதல் 1 செ.மீ. விட்டமும் கொண்ட, சீத, தசை, நார் அடுக்குகளுடைய சுவரும் கொண்ட ஒரு சிறு நீர்க்குழலை ஒவ்வொரு சிறு நீரகமும் பெற்றுள்ளது.

ureter : சிறுநீர்க்குழாய்; மூத்திரக் கசிவு நாளம் : ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும்.

ureterectomy : சிறுநீர்க்குழாய் வெட்டு; மூத்திரக்கசிவு நாள அறுவை : மூத்திரக்கசிவு நாளத்தை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல்.

urethritis : சிறுநீர்க்குழாய் அழற்சி; மூத்திரக் கசிவு நாள அழற்சி : மூத்திரக் கசிவு நாளத்தில் ஏற்படும் வீக்கம்.

ureterocolic : மூத்திரக்கசிவு நாள பெருங்குடல் சார்ந்த : மூத்திரக் கசிவு நாளம், பெருங்குடல் இரண்டும் தொடர்பு உடைய, பொதுவாகக் குருதி நாளங்கள் பின்னிப் பிணைவதைக் குறிக்கும்.

ureterocolostomy (uretero sigmoidostomy) : மூத்திரக்கசிவு நாள பெருங்குடல் இணைப்பு அறுவை சிறுநீரை இரைப்பை வழியாகக் கழிக்கும்படி செய்வதற்காக, சிறுநீர்ப்பையில்