பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vaginitis

1137

valoid


சுரிப்பு. இதனால் கலவியின் போது வலியுண்டாகும்.

vaginitis : யோனிக்குழாய் அழற்சி; புணர்புழை அழற்சி : யோனிக் குழாயில் உண்டாகும் வீக்கம். இதனால் எரிச்சலுடன் இரத்தப்போக்கு ஏற்படும். இது, இரைப்பையில் பீடிக்கும் இழை உறுப்புகளைக் கொண்ட நுண்ணிய ஓரணு உயிரினால் ஏற்படுகிறது.

vaginosis : யோனித்தொற்று : குழந்தைப்பேற்றுப் பருவத்தில் உள்ள பெண்களின், வெள்ளணுப்பற்று இல்லாத யோனித் தொற்று.

vagolysis : அலையுநரம்பழிப்பு : அலையு நரம்பை (பத்தாவது மண்டை நரம்பு) அறுவை செய்தழித்தல்.

vagotomy : மூளை நரம்பு அறுவை; துடிப்பு கடத்து நரம்பு அறுப்பு : மூளை நரம்பினை அறுவை மருத்துவம் மூலம் பிளத்தல்.

vagus nerve : மூளைநரம்பு : மூளையின் கீழ்ப்பகுதியில் இருந்து தொண்டை, நுரையீரல்கள், இதயம், இரைப்பை ஆகிய உறுப்புகளுக்குச் செல்லும் நரம்பு. இது துணைப்பரிவு நரம்பு. இது சுவாசத்தையும், இதயத் துடிப்பையும் மெதுவாக நடைபெறச் செய்கிறது.

valgus, valga, valgum : கோணை உருவம் வெளிவளைவு : உறுப்பு விளிம்புப்பகுதி வளைந்த உருக்கோணல் முட்டுக்கால்.

validity : முறைமைத்தகுதி : புள்ளிவிவர இயலில், விரும்பிய பொருளின் உண்மையான அளவை, சோதனையின் முடிவில் கிடைத்த விவரம் எந்த அளவு சரியானது.

valine : வாலைன் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

vallecula : பரிப்பள்ளம் : ஒரு பரப்பின் மேலுள்ள கோட்டுக் குழி அல்லது பள்ளம்.

valley fever : பள்ளத்தாக்குக் காய்ச்சல் : காக்கிடியாசிஸ் வகை பூஞ்சை உண்டாக்கும் நுரையீரல் வடிவத் தொற்று.

vallum : வாலியம் : தசை இறுக்கத்தைத் தளர்த்தக் கூடிய மயக்க மருந்தின் வணிகப் பெயர். காக்காய் வலிப்பின் போது ஊசிமூலம் செலுத்தப் படுகிறது.

valoid : வாலாய்டு : புண் ஏற்பட்ட இடத்தில் இரத்தத்தில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் சைக்ளிசின் (எதிர் விழுப்புப் பொருள்) என்ற மருந்தின் வணிகப் பெயர்.