பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anaplasty

114

anchylostomiasis


வடிக்கையுடன் இது தொடர் புடையது.

anaplasty : உயிர்க் கூறு ஒட்டு முறை : அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலிடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை.

anarthria : பேச்சின்மை; பேச்சிழப்பு : ஒருவர் வாய்பேச முடியா திருக்கும் ஒரு நிலை.

anasarca : தோலடி நீர்க்கோவை; முழுமெய் வீக்கம்; உடல் வீக்கம்; நீர்க்கோவை : புறத்தோலின் அடித்திசுக்களிலும், நிணநீர்க் குழிகளிலும் ஊனீர் ஊடுருவித் தேங்கியிருத்தல். இது பொதுவாக இழைம அழற்சி அல்லது இழைமங்களின் நீர்க்கோவை எனப்படும்.

anastomosis : குருதி நாளப் பின்னல்; பிணைப்பு; நாளப் பிணைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தமனிகள் அல்லது சிரைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருத்தல், அறுவை மருத்துவத்தில் உட்புழையுள்ள இரண்டு உறுப்புகள், குழாய்கள் அல்லது நரம்புகள் பின்னி ஒன்று பட்டிருத்தல்.

anatomical : உடற்கூற்றியலான.

anatomical position : உடற் கூற்றியலான; உடல் உட்கூற்று அமைப்பு நிலை : உடலின் உள் உறுப்புகளின் முன்புறத்தோற்றத்தைப் பார்க்கும் வகையில் உடல் முன்னோக்கியவாறு நேராக நின்றும் தோற்றத்தில் அமைந்திருக்கும். இதில் கைகள் உடலில் பக்கவாட்டில் உள்ளங்கைகள் முன்னோக்கியவாறு அமைந்திருக்கும். முதுகுப்புறம் நேராக உள்ள நிலையில் பின் புறத்தோற்றம் அமைந்திருக்கும்.

anatomist : உடலியல் வல்லுநர் : உடலியல் துறையில் சிறப்புப் பயிற்சி அல்லது பட்டம் பெற்ற வல்லுநர்.

anatomy : உடல் உட்கூறியல்; உடற்கூறியல் : உள் உறுப்புகளான எலும்புகள் போன்ற உள் உறுப்புகளின் அமைப்பினை பிளந்து பார்த்து ஆராயும் துறை.

ancestral : தொல்மரபிய.

anchylose : மூட்டுவிறைப்பு : எலும்பு முட்டுகள் விறைத்துப் போதல்.

anchylosis : மூட்டு விறைப்பு நோய் : மூட்டுக்கள் விறைத்துப் போகும் நோய்; கணுக்கள் திமிர் கொள்ளுதல்.

anchylostomiasis : கொக்கிப் புழு நோய் : கொக்கிப் புழு போன்ற புழுவால் ஏற்படும் குருதிச் சோர்வு நோய்.