பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ancoloxin

115

androgens


ancoloxin : ஆங்கோலாக்சின் : புண் ஏற்பட்ட இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துகளில் (எதிர் விழுப்புப் பொருள்) ஒன்று.

anconitis : முழங்கை மூட்டழற்சி : முழங்கை முட்டில் ஏற்படும் அழற்சி, வீக்கம், வலி.

ancrod : குருதிக் கட்டுத் தடைப் பொருள் (ஆங்க்ரோடு) : மலேயாக் குழிவிரியன் பாம்பின் நஞ்சில் இருந்து எடுக்கப்படும் குருதி உறைவதைத் தடுக்கும் பொருள். இது கட்டியாக உறையக்கூடியக் கசிவு ஊனீரை அழித்து இரத்தத்தில் இந்தக் கசிவு ஊனீர் (ஃபிப்ரின்) உருவாவதற்கான முக்கிய காரணியைக் குறைத்து விடுகிறது. இது ஒர் அயல் புரதம் ஆகையால், இது உடலின் நோய் எதிர்ப்புப் பொருள் உண்டாகத் தூண்டுகிறது. இதனால் சில வாரங்களில் நோயாளியிடம் இதன் வினைக்குத் தடை உண்டாகிறது. எனவே இதனை குறுகிய விளைவுக்கே பயன்படுத்தப் படுகிறது.

anclyostoma : குடற்புழு : சிறு குடல் முகப்பில் மொய்த்திடும் புழுக்கள். இவை மலத்துடன் வெளியே வந்து, ஈரமண்ணில் முட்டையிட்டு, கொக்கிப்புழுக்கள் உருவாகின்றன. இக்கொக்கிப் புழுக்குள் சென்று நோய் உண்டாக்குகின்றன. காலணிகளை அணிவதன்மூலமும், கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இப்புழுக்கள் உடலுக்குள் செல்லாமல் தடுக்கலாம்.

anclyostomiasis : குடற்புழு நோய் : மனிதனின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்தசோகையும் ஏற்படும்.

androblastoma : ஆண்மை யாக்க நோய் : பெண் கருப்பையில் ஏற்படும் ஒருவகைக் கட்டி இது ஆண்பால் அல்லது பெண்பால் இயக்குநீர்களை (ஹார்மோனை) உற்பத்தி செய்து, பெண்களிடம் ஆண்தன்மையினையும், சிறுமியரிடம் பருவத்திற்கு முந்தியே பூக்கிற தன்மையையும் உண்டாக்குகின்றன.

androcur : ஆண்ட்ரோக்குர் : 'சைப்ரோட்டெரான்' என்ற மருந்தின் வணிகப் பெயர்.

androgen : ஆணிய ஊக்கி நீர்.

androgens : ஆண்பால் இயக்கு நீர்; ஆண்மையூக்கி : ஆண்பால் மரபுக் கூறுகளை வளர்த்துப் பேணக்கூடிய இயக்கு நீர்மப் பொருள் (ஹார்மோன்). இதனால், ஆண்களிடம் மயிர் வளர்வது, குரல் ஆண் குரலாக மாறுவதும் நடைபெறுகின்றன.