பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

water-lily sign

1166

Weakness


உணரும்படியான தாக்கத்தைத் தருகிறது.

water-lily sign : ஆம்பல் மலர்க் குறி : காற்றும் நீரும் நிறைந்து ஒரு மிதக்கும் படலத்தையும் கொண்ட குழிவறை போன்ற தோற்றத்தை எக்ஸ்ரே படத்தில் காட்டும் (நோய் நீர்கொண்ட) ஹைடாட்டிட் நீர்க்கட்டி உடைப்பு.

waters : நீரங்கள் : வளர்கருவைச் சூழ்ந்துள்ள பனிக் குடநீர்.

water's view : வாட்டர் பார்வை : நாசிப்பக்க, எலும்புக் காற்றறை களின் எக்ஸ்ரே பட, பின் மண்டை தாடைக்காட்சி.

watershed lesions : நதிமூல நோயிடங்கள் : மூளையின் குருதிக்குறைக் கோளாறுகளில் தமனிகள் அமைந்துள்ள இடங் களுக்கிடையேயுள்ள நோயிடங்கள்.

water soluble : நீரில் கரையும் : நீரில் கரைக்கப்படக்கூடிய தன்மை கொண்ட.

watkin's operation : வாட்கின் அறுவை மருத்துவம் : அமெரிக்க மகளிர் நோய் மருத்துவர் தாமஸ் வாட்கின்ஸ் பெயராலமைந்த அறுவை சிகிச்சையில் பிதுக்கித் தொடங்கும் கருப்பையை சரி செய்யய கருப்பை யிலிருந்து சிறுநீர்ப்பையைப் பிரித்தெடுத்தல்.

waterson's operation : வாட்டர்ஸன்ஸ் அறுவை : வலது துரையீரல் தமனி பெருந்தமனியுடன் பின்னிப் பிணைந்து விடுவதைத் தளர்த்துவதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

wavelength : அலைநீளம் : முதல் அலையின் உச்சிக்கும் தொடர்ந்து வரும் அலையின் அதே நிலைப் பகுதிக்கும் இடையில் உள்ள தூரம்.

wax : மெழுகு : பெட்ரோலியம் அல்லது தாவரங்களிலிருந்து பெறப்பட்டது அல்லது பல்வேறு கொழுப்பு அமிலங்களின் எஸ்டர் பூச்சிகளால் ஒரு நெகிழ்மப்பொருள் வடிவில் பதியப்பட்டது. குறும்பி மற்றும் கொழுப்புச் சுரப்பிகளின் சுரப்புகளாலான கலவை, செவிக்கால்வாயின் குருத்தெலும்புப் பகுதியில் உள்ளது. அது ஒரு இறுக்கமான வளையத்தை உருவாக்கி, செவிட்டுத்தன்மை, காதிரைச்சல், காதுவலி மற்றும் காதுக்குறும்பையை உண்டாக்குகிறது.

WBC : இரத்த வெள்ளையணு : இரத்தத்திலுள்ள வெள்ளை உயிரணுக்கள்.

weakness : வலுக்குறை : வலிமை குறைந்தது போன்ற உள்ள உணர்வு.