பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xerophthalmia.....

1184

X radiation


xerophthalmia (xerosis) : கண்ணழற்சி; வரட்டுக்கண் : நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய். இது வைட்டமின்-ஏ உயிர்ச் சத்துக் குறைபாட்டினால் உண்டாகிறது. இது கண் குருடாவதற்கு வழிவகுக்கும்.

xeroradiography : உலர் கதிர்ப் படப்பதிவு : ஒரு உலர் ஒளிமின் செய்முறையில் கதிரிப்பட உருப்பதிவு செய்தல். இதில் செலெனியம் போன்ற முழுமையற்ற கடத்தி பூசப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும், படத்தை வெளிப்படுத்த நீர்ம வேதிப் பொருளைப் பயன்படுத்தாமல் உலர்பொடியைப் பயன்படுத்துதல்.

xerotic : உலர்ந்த; உலர்; உலர் நிலை; உலர் பளிங்கு ஒளிப்படல அழற்சி : உலர் இமையினைப் படலத்திலிருந்து உண்டாகும் விழி பளிங்குப் ஒளிப்படல அழற்சி.

xerostomia (xerostoma) : வாய் உலர்வு; வாய் வறட்சி; வரள் வாய் : உமிழ்நீர்க் கசிவின்றி வாய் உலரும் நோய்.

xerotes : உடல் உலர்வு : நீரின்றி உடல் உலர்ந்து போதல்.

xerotocia : உலர்பிரசவம் : பனிக் குடநீர் அளவு குறைந்ததால் உலர்பிரசவம்.

xerotomography : உலர்உள்தளப் பதிவு : உலர் கதிர்படமுறை மூலம் உருவங்களைப் பதிவு செய்யும் உள்தளப் பதிவு.

xiphocostal : வாளுரு விலா எலும்பு சார்ந்த : (மார்பெலும்புக்) கீழ் துருத்தம் மற்றும் விலா எலும்புகளைக் குறிக்கும்.

xiphodynia : வாள்முனை வலி : மார்பெலும்புக் கீழ்முளையில் வலி.

xiphoid (xiphisternum) : மார்பெலும்பின் கீழ்க்கோடி.

xiphopagus : வாள்துருத்த இணை இரட்டையர் : மார்பெலும்பின் கீழ் (முளை)த்துருத்தத்தில் ஒட்டியிணைந்து உள்ள சமச்சீர் இரட்டையர்.

x linkage : பாலினத் தொடர்பு : எக்ஸ் நிறப்புரிகளின் மேல் ஏந்திச் செல்லப்படும் மாறிய மரபணுக்களால் தீர்மானிக்கப்படும் கோளாறுகள்.

X-linked : எக்ஸ் தொடர்பு கொண்ட : பாலினத் தொடர்பு முறையில் மரபணுக்கள் எக்ஸ் நிறப்புரி இனக்கீற்றுகளில் ஏந்திச் சென்று கொண்டு செல்லல், பாதிக்கப்படும் நபர்கள் ஆண்களாவர்.

X radiation : எக்ஸ் கதிர் வீச்சு : எக்ஸ் கதிர்களுக்கு உட்படுதல் அல்லது எக்ஸ் கதிர்கள் கொண்டு மருத்துவம்.