பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xenopsylla

1183

xeromenia


தெள்ளுப்பூச்சியான செனோப்சில்லா சியோ(ப்)பிஸ் ஆகும்.

xenopsylla : எலியுண்ணி : பிளேக் நோயைப் பரப்பும் கொடிய தெள்ளுப் பூச்சி வகை.

xenorexia : அயல்பொருள்பசி : இயல்புமாறிய பசியால் வெளிப் பொருட்களை அடிக்கடி விழுங்குதல்.

xenotransplantation (xeno graft) : விலங்கு உறுப்புமாற்று அறுவை : மனிதருக்கான உறுப்பு மாற்று அறுவை மருத்துவத்தில் விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துதல்.

xenotropic : அயல்வளர்ச்சி : 9(5 பிராணி இனத்தின் உயிரணுக் களில் காணப்படும் வைரஸ் வேறொரு இனப்பிராணியின் உயிரணுக்களைத் தொற்றும் போது மட்டும், பெருக முடிகிறது.

xerasia : உலர்மயிர் : இயல்புக்கு மாறாக உலர்ந்து, உடையக் கூடிய மயிர்நிலை கொண்ட மயிர் வியாதி.

xero : கிஸேரோ : உலர்நிலை தொடர்பான கூடும் (ஆங்கில) வார்த்தை.

xerocyte : அயலணு : இரத்தச் சிவப்பணுவின் சவ்வில் உள்ள குறையால் பொட்டாசியம் மற்றும் தண்ணிர் இழப்பை அனுமதிப்பதால் உயிரணுக்களை நீரிழக்கச் செய்து பாதி இருண்டும் பாதி வெளுத்தும் காணச் செய்கிறது.

xeroderma (xerodermia) : தோல் உலர்வு; வரட்டுத் தோல் : தோல் உலர்ந்து போகும் நோய்.

xerogram : உலர்பதிவுப்டம் : உலர்பதிவால் உண்டாகும் உருவம்.

xerography : உலர்வரைபதிவு : 1. காகிதத்தில் உருவைப் பெறும் கதிர்ப்படமுறை. 2. உலர்கதிர்ப் படப்பதிவு.

xeroma : உலர்கட்டி : 1. இயல்புக்கு மாறாக உலர்ந்த இமை இணைப் படலம். 2. உலர்கண்.

xeromammography : உலர்மார்பக வரைபதிவு : படத்தாளில்லாமல் காகிதத்தில் மார்பகத்தின் மென்திசுக் கட்டமைப்பின் இறுதி உருவத்தை உண்டாக்கும், ஒளிக்கடத்தியைக் கொண்டு ஒரு மாற்று கதிர்ப்படமுறை.

xeromenia : மாதவிடாய் கோளாறு; உலர் மாதப்போக்கு : மாதவிடாய் நின்ற பின்னரும் இரத்தக் கசிவு இன்றி மற்ற குறிகள் மட்டும் நிகழும்.