பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

yeast

1188

yellow spot


தோன்றும் கழுத்துச் சிரைத் துடிப்பில் எதிர்மறை அலை. அது இரண்டாவது இதய ஒலியைத் தொடர்ந்துவருகிறது.

yeast : நொதி(நுரைமம்) : நுரைத்தல் உண்டாக்கும் ஒரணுவுடைய பூஞ்சணம். இது வைட்டமின்-'பி' தொகுதி நிறைந்தது.

yelk : மஞ்சட்கரு : முட்டையின் மஞ்சள் கரு yolk எனும் சொல்லுக்குப் பதிலி.

Yellow Artificial Chromosome (YAC) : மஞ்சள் செயற்கை இனக்கீற்று (ஒய்ஏசி) : டிஎன்ஏயின் பெருந்துணுக்குகளைப் போன்ற - உருப்பிறப்பை அனுமதிக்கும் பாலினமல்லாப் பிறப்புக் கடத்தி.

yellow atrophy : மஞ்சள் நலிவு : கர்ப்பகால கடைசி மாதங்களில் அடிக்கடி காணப்படும் கல்லீரல் குறுக்கம். ஆபத்தான வருவிளைவைக் குறிக்கிறது.

yello beeswax : மஞ்சள் தேன் மழுகு : தேனிக்களின் தேன் கூட்டிலிருந்து கிடைக்கும், தூய்மைப்படுத்தப்பட்ட மெழுகு.

yellow blood : மஞ்சள் இரத்தம் : இரத்தச் சிவப்பணுக்கள் திரள் கொண்ட ஒரு தொகுதி பால் மஞ்சள் வெண்மை நிறம் கொண்டது. அது நோய்க்கிருமிகள் தொற்றியுள்ளதை காண்பிப்பதால் பயன்படுத்தக் கூடியது.

yellow cartilage : மஞ்சள் குருத்தெலும்பு : மேற்பொதிவுறை யான மஞ்சள் நிறச் சுருங்கி விரியும் குருத்தெலும்பு.

yellow fever (yellow jack) : மஞ்சள் காய்ச்சல் : மஞ்சட் காமாலையும் கருநிற வாந்தியுமுடைய மஞ்சள் காய்ச்சல் நோய் ஒருவகைக்கொசுவால் பரவும் வைரஸ் நோய். இதன் விளைவாக, சிறு நீரகங்களும் நுரையீரலும் வயிறும் வீக்கமடையும்; தோல் மஞ்சள் நிறமாகும் கருநிறத்தில் வாந்தியெடுக்கும் மஞ்சள் காமாலையும் ஈரல் அழற்சியும் ஏற்படும்.

Yellow fever vaccine : மஞ்சள் காய்ச்சல் தடுப்பு மருந்து : கோழிக்குஞ்சு முதிராக் கருவில் வளர்க்கப்பட்ட உயிருள்ள வீரியமிழக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்து. மஞ்சள் காய்ச்சல் நோய்க்கெதிரான காப்புக்குப் பயன்படுத்தப் படுகிறது.

yellow-gum : குழந்தை மஞ்சட் காமாலை.

yellow spot : மஞ்சள் புள்ளி : மஞ்சள் பொட்டு, கண் விழிப்