பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/1198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zonked

1197

zoonotic......


பென்ஸிசாக்ஸ்ஸோல் சல்ஃபானமைடு.

zonked : போதையேறிய : மருந்துகள் அல்லது மதுவால் மிகவும் நச்சூட்டப்பட்ட.

zonoskeleton : பகுதி எலும்புக் கூடு : இடுப்பெலும்பு, முதுகுப்பட்டையெலும்பு, காரையெலம்பு போன்ற உறுப்புகள் ஒட்டும் பக்க எலும்புகள்.

zonula ciliaris : கண்ணிமை இழைப்பிழை : கண்விழியாடியின் புறப்பகுதியைக் கண்ணிமை மயிருடன் இணைக்கும் தொங்கு இணைப்பிழை.

zonule : பட்டை வளையம்; சிறு பகுதி : சிறுபட்டை வளையம்.

zonulolysis : கண்ணிமை இணைப்பிழை அழற்சி; நுண் புலமுறிவு : கண்ணிமை இழைப் பிழையில் ஏற்படும் வீக்கம்.

zoodermic : பிராணித்தோல் சார்ந்த : தோல் ஒட்டறுவையில் போல் பிராணித்தோல் கொண்டு செய்யப்பட்ட.

zooglea : ஒட்டிய நுண்ணுயிர்கள் : ஊன்பசைப்பொருளால் பதியப்பட்டுள்ள, நுண்ணுயிர்களின் தொகுதி.

zoogony : உயிராக்கம் : உடலுக்குள்ளிருந்து, உயிருள்ள இளம் உயிர் ஒன்றை உருவாக்குதல்.

zoograft : விலங்குத்திசு ஒட்டறுவை : ஒரு கீழ்நிலை (பிராணி) விலங்கிலிருந்து திசுவை எடுத்து ஒட்டறுவை.

zooid : விலங்கு போன்ற : ஒரு விலங்குக் கூட்டத்தில் ஒரு உயிர்.

zoolagnia : விலங்குப்பாலின கவர்ச்சி : விலங்குகளின் மேல் பாலினக் கவர்ச்சி.

zoology : விலங்கியல் : விலங்குகளைப் பற்றிக் கூறும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு.

zoomania : விலங்கு வேட்கை : விலங்குகளின் மேல் அளவு மீறிய விருப்பம்.

zoonosis : தாவு நோய்; விலங்கு வழி தொற்று நோய்; விலங்கிய நோய் : விலங்கிடமிருந்து மனிதருக்குத் தாவக்கூடிய நோய், இறைச்சிக் கொட்டில்கள், பண்ணைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்நோய் உண்டாகும்.

zoonotic helminths : விலங்கு ஏந்துகுடற்புழுக்கள் : டிரைக் கிளுல்லாஸ்பைராலிஸ், டாக்ஸோகேரா கேனிஸ், ஆன்ககி லோஸ்டோமாபிரேஸிலியென் சிஸ், க்னேதோ ஸ்டோமா விலங்குகளால் மனிதர்களுக்குப் பரவும் குடற் புழுக்கள்.