பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ankylosis

120

anorectic


இமைகளின் விளிம்புகள் இயற்கைக்கு மாறாக ஒட்டிக் கொண்டிருத்தல்.

ankylosis : மூட்டு விறைப்பு : நோய் காரணமாக ஒரு மூட்டு விறைத்து விடுதல்.

ankyloglossia : படிநா.

ankylostoma : கொக்கிப் புழு.

anky lostomasis : கொக்கிப் புழுப்பாடு.

annular : மூட்டு இணைப்புத் தசை நார்; வளைய உரு :மோதிரம் போன்ற வளைய வடிவுடைய தசை நார். மணிக் கட்டு, கணுக்கால் மூட்டுகள் உள்ளது போன்ற நீண்ட எலும்புகளை இது பிணைக்கிறது.

anodyne : நோயாற்றும் மருந்து (அனோடைன்) வலியகற்றி; வலி நீக்கி : வலிமை நீக்கும் ஒருவகை மருந்து.

anogenital : குதம்-பிறப்புறுப்பு மண்டலம் : குதம், பிறப்புறுப்பு மண்டலம் தொடர்பான.

anomaly : முறை திறம்பிய; மாறி செறி விலகல் : இயல்பு நிலையிலிருந்து மாறுபட்ட அல்லது வேறுபட்ட அல்லது இயல்பு திறம்பிய.

anomia : பெயர் மறதி நோய் : பொருள்களின் அல்லது ஆட்களின் பெயர்களைக் கூற முடியாத நிலை.

anomie : தனிமையில் வாழ்பவர் : மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மற்றவர்களுடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் தனிமையில் வாழு ஒரு நபர்.

anonychia : நகமின்மை : நகங்கள் இல்லாதிருத்தல்.

anoperineal : குதம்-எருவாய் மண்டலம் : குதம், விரைப் பைக்கும் எருவாய்க்கும் இடைப் பகுதி ஆகியவை தொடர்பான மண்டலம்.

anopheles : மலேரியாக் கொசு; முறைக் காய்ச்சல் கொசு : முறைக்காய்ச்சலை (மலேரியா) உண்டாக்கும் ஒருவகைக் கொசு இனம். இந்தக் கொக இனத்தின் பெண்கொசுக்கள் கடிப்பதால் மனிதருக்கு முறைக்காய்ச்சல் உண்டாகிறது.

anoplasty : குத அறுவைச் மருத்துவம் : குதத்தில் அறுவை மருத் துவம் செய்து நோயைக் குணப்படுத்தும் முறை.

anorchism : விரையின்மை; காயின்மை : ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு விரைகளும் பிறவியிலேயே இல்லாதிருத்தல்.

anorectal : குதவாய் தொடர்பான நோய் : குதம், குதவாய் தொடர் பான வெடிப்பு நோய்.

anorectic : பசியின்மை; பசி தணிப்பி; பசியடக்கி; பசிகுறைப்பி : (1) உணவு உண்பதில் விருப்பம்