பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

anteversion

123

anthropometry


anteversion : முன்னோக்கிச் சாய்வு; முன்சாய்வு : உடலின் ஒர் உறுப்பு அல்லது பகுதி முன்னோக்கிச் சாய்ந்தோ இடம் பெயர்ந்தோ இருத்தல்.

anthema : 'தோல் பெருங் கொப்புளம்': தொடர்புடைய ஒர் இணைப்புச்சொல். (எ-டு) (enanthema) சளிப்படலக் கொப்புளம்.

anthelmintic : குடற்புழு நீக்க மருந்து; புழுப்பகை; பூச்சிக் கொல்லி ; குடற்புழு மருந்து : குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற அல்லது ஒழிக்கிற ஒரு மருந்து.

antheroselerosis : தனிமத்துடிப்பு.

anthiphen : ஆந்திஃப்ன் : மெப்பிராமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

anthracene : ஆந்தரசின் : கரி மற்றும் தார் இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஹைட்ரோ-கார்பன். சாயம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

anthracoid : தோற்றத்தில் இராஜ பிளவை போலிருக்கின்றன.

anthracosis : நுரையீரல் நோய்; நுரையீரல் கரிப்படிவு; கரிமநோய் : நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய்.

anthracycline : ஆந்திரசைக்ளின் : புற்றுநோய்க்குத் தரப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க் கொல்லி. டானாமைசின் மற்றும் டாக்சோ ருபிசின் கலந்த மருந்து.

anthraquinone : ஆந்திரகுயினோன் : ஆந்திரசீனிலிருந்து தயாரிக்கப்படும் குயினோன் வகை மருந்து. சாயம் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.

anthrax : நச்சுப் பரு : கால்நடைகளுக்கு உண்டாகும் ஆபத்தான நச்சுச் சீழ் கட்டு நோய். இது ஒரு தொற்று நோய். இது கால்நடை களிடமிருந்து மனிதருக்கும் தொற்றக்கூடும்

நச்சுப் பரு

anthropoid : சுருங்கிய இடுப்பெலும்பு : இடுப்பு வளையம் பக்கத்துக்குப் பக்கம் குறுகிச் சுருங்கியுள்ள இடுப்புக் கூடு.

anthropology : மானுடவியல்; மாந்தவியல் : மனிதகுலத்தைப் பற்றி ஆராயும் துறை. இதில் பல பிரிவுகள் உண்டு.

anthropometry : மனித உடல் அளவை; உடல் அளவி, மானிட நிலை அளவி : மனிதரின் உடல், அதன் உறுப்புகள் ஆகியவற்றின் அளவை. ஒப்பீடு செய்வதற்