பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antifibrinolytic

127

antimetabolite


அசிட்டானிலைடு என்ற மருந்து. இது அசிட்டிக் அமிலம், அனிலின் இரண்டும் கலந்து பெறப்படுகிறது.

antifibrinolytic : ஊநீர்கோளாறு தடுப்பு மருந்து : கட்டியாக உறையக் கூடிய ஊனீர் கசிவுக் கோளாறுகளைத் தடுக்கக்கூடிய மருந்து.

antitungai : காளான் ஒழிப்பு மருந்து; காளான் நீக்கிகள்; பூசணப் பகை :நோய்த்தன்மையுடைய காளான் (நாய்க்குடை) வகையை ஒழிக்கும் மருந்து.

antigen : காப்பு மூலம்; உடற் காப்பு ஊக்கி; விளைவியம் : அயற் பொருளிலிருந்து உயிரினம் காக்கும் உயிர் தற்காப்புப் பொருளை உண்டு பண்ணும் பொருள் மூலம். இது இரத்தத்தில் உற்பத்தியாகும் நோய் எதிர்ப் பொருளை உண்டாக்குகிறது.

antihaemophilic globulin (AHG) : குருதிப்பெருக்குத் தடுப்புப் புரதப் பொருள் : இரத்தக்கட்டியில் அடங்கியுள்ள VIII. இது நிண நீரில் உள்ளது; குருதி நிணநீரில் இல்லை. குருதிப் பெருக்கில் குறைவாக இருக்கிறது.

antihaemorrahgic : குருதிப்போக்குத் தடைப்பொருள் : குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படுவதைத் தடுக்கும் பொருள். இதனை வைட்டமின் K என்பர்.

antihypertensive : உயர் இரத்த அழுத்தத் தடைப்பொருள்; மிகை அழுத்தக் குறைப்பி; பேரழுத்தத் தணிப்பி : உயர்ந்த இரத்த அழுத் தத்தைக் குறைக்கும் ஒரு பொருள்.

antiinfective : தொற்றுத் தடைப்பொருள்; தொற்றுத் தடை : நோய் தொற்றுவதைத் தடுக்கும் மருந்து, இதனை வைட்டமின் A என்பர்.

antiinflammatory : வீக்கத்தடுப்புப் பொருள் நீக்கி; அழற்சித் தடை : வீக்கத்தைக் குறைக்கிற அல்லது வீக்கம் ஏற்படாமல் தடுக்கிற பொருள்.

antileprotic : தொழுநோய்த் தடுப்பு மருந்து; தொழுநோய் எதிர்ப்பி; தொழுநோய்ப் பகை : தொழுநோய் ஏற்படாமல் தடுக்கிற அல்லது தொழுநோயைக் குணப்படுத்துகிற ஒரு மருந்து.

antilymphocyte serum (ALS) : நிணநீர் அணு எதிர்ப்பு ஊனீர்; படிநீர்ச்செல் எதிர்ச் சீரம் : நிண நீர்களின் செயல்களைத் தடுத்து அவற்றைக் கட்டியாக்குகிற நோய் எதிர்ப்புப் பொருள்களையுடைய ஊனிர்.

antilysian: சிதைவு த்டைவி.

antilysis : சிதைவுத் தடை.

antimetabolite : வளர்சிதை மாற்றத் தடுப்புப் பொருள்; ஊன்ம ஆக்கத்தடை : ஒர் உயிரணுவின் கருமையப் புரதங்களில் ஒருங் கிணைத்து அதன் வளர்ச்சியைத்