பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

antimicrobial

128

antiparkison (ISM)...


தடுப்பதற்குக் தேவையான வேதியியல் பொருள்களை ஒத்திருக்கும் ஒரு கூட்டுப்பொருள். இது புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

antimicrobial : நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்; நுண்ணுயிர்ப் பகை : உயிர் நுண்மங்களுக்கு எதிராகச் செயற்படும் பொருள்.

antimicrobic : நோய் நுண்மத் தடை.

antimigraine : ஒற்றைத் தலைவலித் தடுப்பு மருந்து : கடுமையான ஒற்றைத் தலைவலியைத் தடுக்கும் மருந்து.

antimitotic : உயிரணுப் பிளவு இயக்கத்தடுப்பு மருந்து; திசுப்பிளப்புத் தடை : உயிரணு நுண்னிழையாகப் பிரிந்து இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்கும் மருந்து. புற்று நோயைக் குணப்படுத்துவதற்கான பல மருந்து களை இது குறிக்கும்.

antimony and potassium tartrate : கருநிமிளை மற்றும் பொட்டாசியம் டார்ட்ரேட் : அஞ்சனக்கல் எனப்படும் கருநிமிளை (ஆன்டிமணி) பொட்டாசியம் புளியகக்காடியின் உப்புச்சத்து அடங்கிய ஒரு வகைப் பழைய மருந்து. இது இப்போது, வெப்ப மண்டல நோய்களைக் குணப்படுத்த முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

antimutagen : வகை மாற்றத் தடுப்புப் பொருள் : உயிரினவகை மாற்ற வினையைப் பயனற்றதாக்கும் ஒரு பொருள்.

antimycotic : காளான் அழிப்புப் பொருள்; காளான் நோய் : நோய் உண்டாக்கும் ஒட்டுயிர்க் காளான்களை அழிக்கும் ஒரு மருந்து.

antineoplastic : புது உயிர் ஊன்ம எதிர்ப்புப் பொருள் : புதிய உயிர் ஊன்மங்களுக்கு எதிராகச் செயற்படும் ஒரு பொருள்.

antinephritic : குண்டிக்காய் பற்றிய; நோய்க் கெதிராகச் செய்யப்படுகிற.

antineurtic : நரம்பு நோய்த்தடுப்பு மருந்து; நரம்பழற்சித் தடை : நரம்பு நோயைத் தடுக்கும் மருந்து, இது குறிப்பாக வைட்டமின் B கலவையைக் குறிக்கும்.

anti-oedema : வீக்கத் தடை.

antiodontgic : பல்வலி தடுக்கும் மருந்து.

antioxidants : ஆக்சிகரண எதிர்ப்புப் பொருள்; ஆக்சியேற்றி எதிர்ப்புப் பொருள்; உயிர் வளியேற்ற எதிர்ப்பிகள் : ஆக்சிகரண முறையைத் தாமதப்படுத்தும் ஒரு பொருள்.

antiparkison (ISM) drugs : பார்க்கின்சன் நோய்த்தடை மருந்து : 'ஃபினோத்தியாசின்' போன்ற