பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

argon

142

arsenic


இது மனக்கோளாறுகளுக்குக் காரணமாகிறது.

argon : ஆர்கான்(மடியம்) :காற்று மண்டலத்திலுள்ள அணு எடை 18 உடைய, இயக்கத் திறனற்ற ஒரு வாயு.

argyll robartson pupil : ஒளியுணர்விலாக் கண்மணி : கண்ணின் பார்வை ஒளியுணர்வு இல்லாதிருத்தல். நரம்புமேகப் புண்ணில் இந்நிலை உண்டாகிறது. நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய் உண்டாகும் போதும் நீரிழிவு நோயின் போதும் இந்நோய் ஏற்படலாம்.

argyria : வெள்ளி நச்சு.

argyrophil : வெள்ளி ஈர்ப்பி; வெள்ளி உப்பு ஈர்ப்பி : உப்புகளை ஈர்க்கும் தன்மையுள்ள.

ariboflavinosis : வைட்டமின் B குறைபாடு : 'ரிபோஃப்ளேவின்' போன்ற வைட்டமின் B கலவைக் கூறுகள் இல்லாமையால் ஏற்படும் குறைபாட்டு நிலை.

arief : ஆரியஃப் : ஃபுளுஃபினேம் அமிலத்தின் வணிகப் பெயர்.

arm : கை : 1. மேற்கை : தோள் பட்டைக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதி.

armhit : அக்குள்.

arnold chiari malformation : ஆர்னால்ட் சியாரி மூளைக்கோளாறு : மூளையின் ஆதாரத்தைப் பாதிக்கக்கூடிய பல கோளாறுகளின் ஒரு தொகுதி. தலையில் நீர் தங்கி மூளைநீர்க்கோவை ஏற்படும்போது இவை பெரும்பாலும் உண்டாகின்றன.

aroma : நறுமணம்.

aromatic : மணப்பண்பு : இனிய மணமுடைய, விரும்பும் மண முள்ள.

arrector : நிமிர்த்தி; உயர்த்தி, நிமிரும்; உயரும் : உயர்த்தும் தன்மையுள்ள நிமிர்த்தும் தன்மையுள்ள.

arrest : தடு; தடை.

arrest cardiac : இதயத் தடை.

arrheno : ஆண் : 'ஆண்' என்று பொருள் தரும் இணைப்புச் சொல்.

arrhythmia : பிறழ்வு இதயத்துடிப்பு; லயமின்மை : இதயத் துடிப்பு இயல்பான கதியிலிருந்து பிறழ்ந்திருத்தல்.

arsenic : ஆர்செனிக் உள்ளியம் : அரிதார நஞ்சு, சவ்வீரம் உடல்நலியச் செய்யும் இரத்தச்சோகை, இரைப்பை-குடல் கோளாறு, நரம்புக் கோளாறு போன்ற நோய்களை இந்தக் கடும் நஞ்சு உண்டாக்குகிறது.