பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

asialorrhea

150

asphyxia


கைகளும் ஒரே நேரத்தில் வாதமடைந்து விடும் நிலை இயங்கு நரம்பிழை வேர்கள் சிதைவதால் இந்நோய் ஏற்படுகிறது. கை, கால்களை அசைக்க இயலாது என்றாலும் தொடு உணர்ச்சி இருக்கும்.

asialorrhea : உமிழ்நீர்க்குறைச் சுரப்பி: உமிழ்நீர்ச்சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் குறைவாகச் சுரத்தல்.

asilone : அசிலோன் : வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஆகிய நோய்களைக் குணப்படுத்துவதற்கான பாலிமெத்தில் சிலோக்சான், அலுமினியம் ஹைட்ராக்சைடு அடங்கிய ஒரு மாத்திரை.

asparaginase : அஸ்பராஜினேஸ்: அஸ்பராஜின்னை அஸ்பார்டிக் அமிலம் மற்றும் அமோனியாவாக மாற்றுவதற்கு வினைபுரியும் நொதி.

எஸ்செரிக்சியா கோலி கிருமியில் காணப்படும் ஒரு நொதி. இது இரத்தப்புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

asparagine : அஸ்பராஜின் : புரதப் பொருளில் காணப்படும் ஒரு அமினோ அமிலம். இது உடலுக்கு மிக அவசியமாகத் தேவைப் படுவதில்லை.

aspartate : அஸ்பார்ட்டேட் : அஸ்பார்ட்டிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உப்பு.

அஸ்பார்ட்டேட் அமினோ டிரான்ஸ் ஃபேரஸ் : இது ஒரு நொதி. குளுட்டமிக் அமிலத்திலிருந்து அமின் கூறுகளை ஆக்சலோ அசிட்டிக் அமிலத்திற்கு மாற்றும் பண்புடைய ஒரு நொதி,

aspartic : அஸ்பார்ட்டிக் அமிலம் : அமினோ சக்சீனிக் அமிலம். புரதப் பொருளில் காணப்படும் ஒரு வகை அமினோ அமிலம்.

aspect : நோக்கு; பார்வை; தோற்றம்; பார்க்கும் கோணம்; பக்கத் தோற்றம்.

aspergilloma : அஸ்பெர்ஜில்லோமா; பூஞ்சைக் காளான் நோய் : நுரையீரலைத் தாக்கும் காளான் நோய்.

aspergiliosis : அஸ்பெர்ஜில்லோசிஸ்; பூஞ்சைக் காளான் இனம்.

aspergillus : பூசினை; பூசனம்; பூஞ்சக் காளான் : பூஞ்சைக் காளான் இனம். இதில் சில வகைகள், நோய் உண்டாக்கக் கூடியவை.

aspermia : விந்துக் குறைபாடு; விந்தணுவின்மை; விந்துயிரின்மை; விந்திலா : விந்து சுரத்தல் அல்லது வெளிப்படுதல் இல்லாதிருத்தல்.

asphyxia : மூச்சு திணறல்; மூச்சுத் தடை; மூச்சடைப்பு : நாடி நிறுத்தம்; மூச்சுத் தடைபடுதல், நுரையீரல்களில் ஆக்சிஜன் அளவு குறைந்து, கார்பன்டை-ஆக்சைடு அளவு கூடும்