பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

asterion

152

astrobiast


மாறா இயல்பினையும் உணர்ந்து கொள்ளும் திறன் இல்லாதிருத்தல்.

asterion : அஸ்டெரியான்; மூன்றெலும்பு இணைப்பு : கபால எலும்பில் பிடரி எலும்பு பக்கக் கபால எலும்பு, பொட்டெலும்பு ஆகியவை இணையும் இடம்.

asterixis : அஸ்டெரிக்கிஸ்; கைநடுக்கம் : கல்லீரல் நோய்களின் முற்றிய நிலையில் உண்டாகின்ற சூழ்நிலை மாற்றத்திற்கு முந்தைய காலத்தில் கைகளில் ஏற்படும் கட்டுப்பாடற்ற நடுக்கம்.

asteroid: அஸ்டிராய்டு; நட்சத்திர வடிவம் : நட்சத்திரம் போன்ற வடிவமுள்ள.

asthenia : தளர்ச்சி; சோகை; வலுவின்மை; பலவீனம்; வலுக்குறை :வலிமையின்மை பலவீனம், தளர்ச்சியுடைமை.

asthenic : வலுக்குறைந்த; நலுவுற்ற நிலை.

asthenocoria : மந்த விழிமணி வினை : கண்மணியின் மந்தமான எதிர்வினை.

asthenopia : பார்வைக் குறைபாடு; பார்வை நலிவு : பார்வைத் திறன் குறைவாக இருத்தல்.

asthma astrobiast : ஈளைநோய் (காசம்); மூச்சு இழைப்பு நோய் : மூச்சுத் தடையுடன் கூடிய இருமல் நோய். மூச்சுக் குழுாய்களில் கடுந் தசைச் சுரிப்பு காரணமாக இளைப்பும் மூச்சு விடச் சிரமமும் ஏற்படுதல். இந் நோயைத் தடுப்பதற்கான பல மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

asthmatic: asthmatical : காச நோய் சார்ந்த; ஈளை பீடித்த.

astigmatism : உருட்சிப் பிழை; சிதறல் பார்வை; புள்ளி தோன்றாமை; உருட்டுப் பிறழ்வு : காட்சி முனைப்பமைதிக் கேடு விளைவிக்கும் கண்நோய். கண்விழிப் பின்புறத் திரையின் மீது ஒரு ஒளிக்கதிர்கள் ஒருங்கு குவியாமல் இருத்தல்.

astringency : நரம்பிறுக்கம்; தசைச் சுரிப்பு : திசுக்களை சுருங்கச் செய்து, குருதி சுரப்பதைக் குறைக்கும் நோய்.

astringent : சுருங்குகிற; உறைவி : உறையச் செய்கிற.

astringent Agent : செறிவுப் பொருள் : செறிவுதரும் பொருள்.

astrobiology : வாங்கோள் உயிரியல் : வான் கோளங்களிலுள்ள உயிர்களைக் கண்டுபிடித்து, அவற்றின் உயிர் வாழ்க்கைப் பற்றி ஆராய்ந்தறியும் அறிவியல் துறை.

astroblast : நரம்பு நார்திசு அணுக்கோள் : இது ஒரு வகைக்