பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bandage

182

banthine


வால் போன்ற திசுக்கட்டு. உடலைச் சுற்றிக் கட்டப்படும் கட்டுக்கம்பி. கை அல்லது காலைத் தாங்கிப் பிடிக்கும் கருவி.

bandage : புண் கட்டுத் துணி; கட்டுத் துணி; கட்டு : புண்களில் மருந்திட்டுக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் துணிப் பட்டை. இவை பல்வேறு வடிவுகளில் கிடைக்கின்றன. காயமடைந்த உறுப்புகள் அசையாமலிருப்பதற்கும், உறுப்புகள் திரிபடைந்து விடாமல் இருப்பதற்கும் கூடத் துணிப் பட்டைக் கட்டுப் போடப்படுகிறது.

band cell : பட்டை அணு; கச்சை அணு : முதிர்ச்சி அடையாத பல முனைக்கரு அணு. இரத்த வெள்ளை அணுக்களில் ஒரு வகை.

band form : பட்டை வடிவம்; கச்சை வடிவம்.

bandicoot : பெருச்சாளி : இந்தியாவில் காணப்படும் ஒரு வகைச் சொறி விலங்கு.

bandy : கால்கள்; முழங்கால் பகுதியருகில் வளைந்தகன்ற.

bandy-legged : வளைகால்; கோணற்கால்.

Bang's bacillus : பாங்க் நுண்ணுணியிரி; பாங்க் நோய் நுண்மம்; பாங்க்நீள நுண்ணுயிரி : டானிஷ் மருத்துவர் பெர்னாட் பாங்க் கண்டுபிடித்த 'புருசெல்லா அபார்ட்டஷ்' கிருமி.

bank : வங்கி; வைப்பகம்; உடல் உறுப்பு வங்கி : ஒருவருடைய உடலுறுப்பையோ, திசுவையோ திரவத்தையோ பெற்று, உரியமுறையில் பாதுகாத்து, அவற்றை வேறொரு நபருக்குப் பயன் படுத்த உதவும் இடம். (எ-டு) இரத்த வங்கி, கண்வங்கி, எலும்பு வங்கி, தாய்ப்பால்வங்கி, திசுவங்கி.

Bankart's operation : தோள் பட்டை அறுவை மருத்துவம் : தோல்பட்டை எலும்புக் குழியில் ஏற்படும் கோளாறு காரணமாகத் தோள் முட்டில் அடிக்கடி ஏற்படும் எலும்பு இடப்பெயர்வைச் சீர்படுத்து வதற்காகச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, இதனைப் பங்கார்ட் அறுவைச் சிகிச்சை என்பர்.

Bannister's disease : பானிஸ்டர் நோய் : சிக்காகோவைச் சேர்ந்த ஹென்றி பானிஸ்டர் கண்டுபிடித்த குருதி நாள நரம்பழற்சி நோய்.

Banocide : பானோசைட் : டையெதில் கார்பாமசைட் எனப்படும் மருந்தின் வணிகப் பெயர்.

banthine : வயிற்றுப்புண் மருந்து : வயிற்றுப்புண்ணை ஆற்றவல்ல சேர்மமான மருந்துப் பொருள்.