பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bibliotherapy

197

bidet


bibliotherapy : முதுகு மருத்துவம்; படிப்பு மருத்துவம் : முதிய நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருத்துவமுறை. அவர்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவு செய்துகொள்வதற்கு உதவுவதற்காக இந்தச் சிகிச்சை அளிக்கப் படுகிறது.

bicarbonate : பைக்கார்போனேட் : கார்போனிக் அமிலத்தின் ஓர் உப்பு. இரத்தத்தில் பைக்கார்போனேட் இருந்தால், அது காரப் பொருள் சேர்ந்திருப்பதைக் குறிக்கும். இதனை நிணநீர்ப் பைக்கார்போனேட் என்றும் கூறுவர்.

bicellular : ஈரணு உயிர்; இரட்டை அணு; இருசெல் : இரு உயிரணுக்களை உடைய உயிர்.

biceps : இருதலை; கை இரு தலைத்தசை : கையில் உள்ள ஒரு தசை. இது முன்கையை மடக்குவதற்கும், மேற்கையை மடக்குவதற்கும் உதவுகிறது. தொண்டை இருதலைத்தசை : தொடையில் உள்ள ஒரு தசை, பின்பக்க வாட்டுப் பகுதியில் உள்ளது. முழங்கால் முட்டை மடக்குவதற்கும் வெளிப்பக்கமாகக் காலைச் சுழற்றுவதற்கும் இது தேவைப்படுகிறது.

Bicillin : பைசிலின் : பென்சாத்தின் பெனிசிலின் மருந்தின் வணிகப் பெயர்.

bicipital : இருதலை : இருதலை கொண்ட கை இருதலைத் தசை.

இருதலைத்தசை வரிப்பள்ளம் : இருதலைத்தசை நாண் மேற்கை எலும்பில் செல்வதற்குண்டான வரிப் பள்ளம்.

biconcave : இருபுற உட்குழிவு; இருபுறக்குழிவு : இருபரப்புகளும் உட்குழிவாக அல்லது உட்புழையுடன் இருத்தல்.

biconvex : இருபுறக் குவியம்; இருபுறக் குவிவு : ஈரிணைக் குவி இருபரப்புகளும் குவிந்திருத்தல்.

bicornuate : இரு கொம்புடைய; இரட்டைக் கொம்பு : இரட்டைக் கருப்பையை அல்லது இரு கொம்புகளுடைய ஒரே கருப்பையுடைய.

bicuspid : இரட்டைக் கதுப்பு: ஈரிதழ் : இரண்டு இதழ்களைக் கொண்ட தடுக்கிதழ். இதயத்தின் இடது மேலறைக்கும் இடது கீழறைக்கும் இடையில் உள்ள ஈரிதழ்த் தடுக்கிதழ் (மைட்ரல் தடுக்கிதழ்). முன் கடவாய்ப் பற்களின் வெட்டுப் பகுதியில் காணப்படும் இரண்டு கதுப்புகள்.

B.I.D (Bis In Die) : இருவேளை; இருவேளை மருந்து : ஒரு நாளைக்கு இருவேளை மருந்து தரப்பட வேண்டும் என்று பொருள்தரும் லத்தீன் மொழிச் சொல்.

bidet : துப்பரவுத் தொட்டி : தண்ணிர்த் தொட்டி போன்ற