பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blood bank

210

blood culture


நெய்ப்புத் தன்மையுடைய திரவம். இதில், குருதிநீர் (பிளாஸ்மா) எனப்படும் உயிர்மப் பொருள் அடங்கியுள்ளது. இதில் இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளணுக்கள், தகட்டு அணுக்கள் மிதக்கின்றன. குருதி நீரில், இரத்தம் கட்டிக்கொள்ள உதவும் பொருள்கள் உட்படப் பல்வேறு பொருள்கள் கரை சலாக அடங்கியுள்ளன.

blood bank : இரத்த வங்கி; குருதி வங்கி : இரத்த தானம் கொடுப் போரிடமிருந்து இரத்தத்தை எடுத்து, அதனைத் தேவையானவர்களுக்குச் செலுத்தவது வரையில் பாதுகாப்பாகக் குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் நிலையம்.

bloodbrain barrier : இரத்த மூளை வேலி : சுற்றோட்ட இரத்தத்திற்கும் மூளைக்குமிடையிலான சவ்வுப் படலவேலி. சில மருந்துகள் இரத்தத்தில் இருந்து இந்தத் தடையின் வழியாக மூளைத் தண்டுவட நீருக்குச் செல்ல முடியும். மற்றவற்றால் முடியாது. எடுத்துக்காட்டு: ஸ்டிரப்டோ மைசின்.

blood casts : இரத்தத்துணுக்குகள் : உறைந்துபோன இரத்தச் சிவப்பணுக்களின் துணுக்குகள். இவை, சிறுநீர்க் குழாய்களில் உருவாகி, சிறுநீரில் காணப்படும்.

blood clotting : இரத்தக்கட்டு; குருதி உறைதல் : இரத்த நாளங் களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஒட்டம் தடைபடுகிறது. நுண்ணிய தட்டணுக்களின் துகள் திரண்டு இரத்த நாளச் சுவர்களில் உள்ள 'கோலேஜன்' என்ற பொருளில் ஒட்டிக் கொண்டு, இடைவெளியை அடைத்துவிடுகின்றன . பொதுவாக நாளச்சுவர்களில் படிந்துள்ள மெல்லிய உயிரணுப் படலத்தினால் பாயும் இரத்தத்தில் இருந்து 'கோலேஜன்' பிரிக்கப்படுகிறது. இந்தப் படலத்தில் ஒரு பிளவு ஏற்படும் போதுதான், கோலேஜனுடன் இரத்தத்திற்குத் தொடர்பு உண்டாகிறது. அதனால் தட்டணுக் கள் அதில் ஒட்டிக் கொள்கின்றன. சுருங்குதலும், அடைப்பும் குருதிப் போக்குகளில் ஏற்படுகின்றன.

blood culture : குருதி வளர்ப்பு; குருதி வரைமை : ஒரு நாளத்தில் இருந்து இரத்தம் வெளியேற்றப்பட்டதும், பெரிதும் உகந்ததொரு வெப்பநிலையில் பொருத்தமானதொரு ஊடகத்தில் இரத்தம் பெருக்கமடையுமாறு செய்யப்படுகிறது. இதனால் உள்ளடங்கிய உயிரிகள் பெருக்கமடைய முடிகிறது. இந்த உயிரிகளைத் தனிமைப்படுத்தி நுண் ணோக்காடி மூலம் அடையாளங் காணலாம்.