பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

blood vessel

213

boil


இயல்பாக இயங்கும்போது, உணவிலுள்ள புரதத்தின் அளவினால் இது பாதிக்கப்படுவதில்லை. சிறுநீரகங்கள் நோயுறும்போது, இரத்த மூத்திரையின் அளவு விரைவாக அதிகமாகிறது.

blood vessel : இரத்த நாளம்; குருதி நரம்பு.

bloody-sweat : இரத்தம் கலந்த வியர்வை காணும் நோய்வகை.

Bloom syndrome : புளூம் நோயியம் : நோய்த்தடுப்பாற்றல் குறைவு நோய். தடுப்பாற்றல் புரதம் குறைவாகவுள்ள நிலைமை.

blotch : கொப்புளம்; கட்டி; தழும்பு.

blotched : தழும்பு தழும்பான.

blotchy : கொப்புளமுள்ள.

blowing test : ஊதல் பரிசோதனை.

blue baby : நீலக் குழந்தை : பிறப்பிலேயே தோலில் நீலம் படரும் நோய் வகையுடைய குழந்தை. பிறவியிலேயே ஏற்படும் சிலவகை இதயக்கோளாறுகளினால் இது தோன்றுகிறது.

blue belly : நீல நிறவயிறு : வயிற்றின் உள்தோலில் இரத்தக் கசிவு ஏற்படும்பொழுது தொப்புளைச் சுற்றின வயிறு நீல நிறத்தில் காணப்படும் நிலைமை.

bluxism : பல் இறுக்கம் : பற்கள் அழுத்தமாக முடிக்கொள்ளுதல். இதனால் தசைச்சோர்வு ஏற்பட்டு தலைவலி உண்டாகும்.

body : உடல்.

body image : உடல் உருக்காட்சி; உடல்பிம்பம் : ஒருவரின் சொந்த உடல் பற்றி அவரது மனதில் தோன்றும் உருக்காட்சி. உணவு உண்ண விருப்பமில்லாதபோது, இது போன்ற மனத்திரிபுகள் ஏற்படும்.

body language : உடல் மொழி : ஒருவரின் தற்போதைய உடல் நிலையினையும், மன நிலையினையும் குறிக்கும், வாய் மொழியற்ற உடற் குறியீடுகள். நிற்கும் தோரணைகள், முக பாவங்கள், இடஞ்சார்ந்த நிலை கள், ஆடையணிகள் ஆகியவை இதில் அடங்கும்.

Boeck's disease : போயக் நோய் : தசைநார் தொடர்பான ஒருவகை நோய்.

Bohn's nodules : போஹ்ன் திரளை : பிறந்த குழந்தையின் அண்ணத்தில் உள்ள நுண்ணிய வெண்ணிற நரம்புக் கணுக்கள்.

boil : கழலை; பரு; கொப்புளம்; கட்டி.

boil (syn furuncle) : கொப்புளம் : (குருதிக்கட்டி) : ஒரு மயிர் மூட்டுப் பையைச்சுற்றி ஏற்படும் கடுமையான வீக்கம் அல்லது கட்டி. இதில் பொதுவாகச் சீழ் கட்டும். அரச