பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

caisson disease

238

calcaneocuboid


caisson disease : காற்றழுத்த நோய் (கேய் சான் நோய்); அழுத்தக் காற்றறை நோய் : அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர் களுக்கு உண்டாகும். காற்றழுத்தம் திடீரெனக் குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. நீரில் முக்குளிப்போர் மேற்பரப்புக்கு வரும்போதும், விமானிகள் மிகுந்த உயரத்திலிருந்து கீழே குதிக்கும் போதும் இது நேரிடுகிறது. இரத்தத்திலுள்ள கரைசலிலிருந்து நைட்ரஜன் குமிழ்கள் வெளிவருவதால் இது உண்டாகிறது. காற்றழுத்தத்தைப் படிப்படியாகக் குறைப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம்.

caladryl : காலாட்ரில் : காலைமன் டைஃபன்ஹைடிராமின் அடங் கியுள்ள கழுவு நீர்மம், களிம்பேடு ஆகியவற்றின் வணிகப் பெயர்.

calamine : காலமைன் : அய ஆக்சைடு கலந்த இளஞ்சிவப்பு நிறத் துத்தநாகக் கார்போனேட் தோலில் குருதியை உறையச் செய்யும் இதன் மென்மையான செயல்முறைக்காக இது கழிவு நீர்மங்களிலும், களிம்பேடு களிலும் பெருமளவில் பயன் படுத்தப்படுகிறது. கார்பாலிக் அமிலத்தின் மென்மையான கரைசலில் காலமைன் கரைந்துள்ள காலமைன் கழிவு நீர்மம், எரிச்சலை நீக்கி நோவகற்றும் தன்மை உடையது.

calamus scriptorius : பேனா வடிவ உறை : ஒரு பேனாவின் வடிவிலுள்ள மூளையின் நான்காவது குழிவுப் பள்ளத்தின் அடித்தளத்தின் தாழ்மட்ட பகுதி. இது திண்ணிய இழைப் பொருள்களிடையே காணப் படுகிறது.

Calbot's rings : கால்போட் வளையம் : கடுமையான குருதிச் சோகையில் காணப்படும் நீல வண்ண இழைபோன்ற துகள்கள். அமெரிக்க மருத்துவ அறிஞர் ரிச்சர்ட் கால்போட் பெயரால் அழைக்கப்படுகிறது.

calcareous : சுண்ண நீற்று சார்ந்த; சுண்ணம் சார்ந்த : சுண்ண நீற்றுச் சார்புள்ள; சுண்ண நீற்றலான.

calcaneal spur : பாத எலும்புக் குதிமுள் : பாத எலும்பின் முண்டிலிருந்து முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும் ஒரு கூர்மையான குதிமுள்.

calcaneoapophysitis : பாத எலும்பு வீக்கம் : குதிகால் தசை நாணின் இணைப்பிடத்தில் உள்ள பாத எலும்பின் பிற் பகுதியில் வலியும் வீக்கமும்.

calcaneocuboid : பாத இணைப்பு எலும்பு சார்ந்த : பாத எலும்பு மற்றும் இணைப்பு எலும்பு தொடர்புடைய.