பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chlordiazepoxide

285

chloroform


இடத்தில் இரத்தத்தில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துகளில் ஒன்று. இதனை 'எதிர் விழுப்புப் பொருள்' என்றும் கூறுவர். பயண நோய்க்கும் இது பயன் படுகிறது.

chlordiazepoxide : குளோர்டையாசிப்பாக்சைடு : மன இறுக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்து. தசையைத் தளர்ச்சியடையச் செய்யும் குணமும் உடையது. இதனை வாய்வழியாகவோ ஊசி மூலமாகவோ செலுத்தலாம்.

chloretic : குளோரெட்டிக் : பித்த நீரை அதிகரிக்கும் ஒரு வினை யூக்கி.

chlorexolone : குளோரெக்சோலோன் : சிறுநீர் கழிப்பதைத் துண்டும் மருந்து.

chlorhexidine : குளோர்ஹெக்சிடின் : பலவகைப் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் கரைசல் மருந்து.

chlorhydria : குளோர்ஹைடிரியா: வயிற்றில் ஹைடிரோகுளோரிக் அமிலம் மிகுதியாக இருத்தல்.

chlorinated : குளோரினேற்றிய : குளோரினேற்றிய பொருள். ஒருசலவைப் பொருளாகவும் ஒரு நச்சு நீக்கியாகவும் பயன் படுத்தப்படும் எலுமிச்சை கால்சியம் ஹைப்போ குளோரைட் மற்றும் கால்சியம் குளோரைடு.

chlorine : குளோரின் (பாசிகம்) : நிறநீக்க. நோய்க்கிருமித் தடைக் காப்பு, போருக்குரிய நச்சு வாயு ஆயுதங்கள் ஆகியவற்றில் நெஞ்சு திணற அடிக்கும், கார மணமுடைய வாயு வடிவத் தனிமங்களில் ஒன்று. இது பசுமஞ்சள் நிறம் உடையது.

chlorine water : குளோரின் கரைசல்.

chlormethiazole : குளோர் மெத்தியாசோல் : உறக்கமூட்டும் மருந்து. மருந்துறைகளாகவும், ஊசி மருந்தாகவும் கிடைக்கிறது. இது மன உளைச்சலைத் தணிக்கக் கூடியது.

chlorocresol : குளோராக்ரிசால் : பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து. ஊசி மருந்துக் குமிழ்களைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுகிறது.

chlorodyne : குளோரோடின் : அபினிச்சத்து, ஈதர், குளோரோஃபார்ம் ஆகியவை கலந்த ஒரு கரைசல். இது உறக்க மூட்டும் மருந்தாகப் பயன் படுகிறது.

chloroform : மயக்க மருந்து (குளோரோஃபார்ம் : எளிதில்