பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

choletherapy

291

cholinolytic


choletherapy : பித்த உப்பு மருத்துவம் : பித்தநீர் உப்புப் பொருள்களைச் செலுத்திச் சிகிச்சையளித்தல்.

cholestyramine : கொலஸ்டிரால் பிசின் : குடலில் பித்தநீர் அமி லங்களுடன் இணைந்து கொள்கிற ஒர் அடிப்படையான அயனிப் பரிமாற்றப்பிசின். இவ்வாறு இணைத்து உண்டாகும் பொருள் ஈர்த்துக் கொள்ளப் படுவதில்லை. எனவே, இது இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது.

cholic : பித்த நீர; பித்த அமிலம் : அடிப்படைப் பித்த அமிலங்களில் ஒன்று. இது பெரும்பாலும் கிளைசினுடன் அல்லது டாரினுடன் இணைந்து காணப்படுகிறது. இது கொழுப்பை ஈர்க்கவும், மிகைக்கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது.

choline : கோலின் : லெசித்தின் அசிட்டில்கோலின் போன்றவையாக அமைந்துள்ள விலங்குத் திசுக்களில் காணப்படும் ஒரு வேதியியல் பொருள். இது வைட்டமின்-B தொகுதியின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது. இது உடல் வளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்து உள்ளது. நுரையீரலில் கொழுப்புப் படிவதை இது தடுக்கிறது. பால் பொருள்களில் இது மிகுதியாகக் கிடைக்கிறது.

choline magnesium trisali cylate : கோலின் மக்னீசியம் டிரைசாலிசைலேட் : சாலிசிலிக் அமிலத்தின் ஒருவழிப் பொருள். இது வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்த மருந்து.

cholinergic : நரம்பு இழைசார்ந்த : நரம்புக் கடத்தியாக அசிட்டில் கோலினாய் பயன்படுத்தும் நரம்பு இழைமங்கள் தொடர்புடைய.

choline theophyllinate : கோலின் தியேஃபைலினேட் : இது ஒரு கூட்டுப் பொருள். இது பொதுவான விளைவுகளில், அமினோ ஃபைலின் போன்றது. எனினும், வினைபுரிவதில், ஒழுங்காக இயங்காதது.

cholinesterase : கோலினெஸ்டெராஸ் : நரம்பு முனைகளில், அசிட்டில் கோலினை நீரிடைச் சேர்மப் பிரிப்பு செய்து கோலினாகவும், அசிட்டிக் அமிலமாகவும் பிரிக்கும் ஒரு செரிமானப் பொருள் தொகுதி.

cholinolytic : நரம்புத்தடைப் பொருள் : 1. அசிட்டில் சோலினின் அல்லது நரம்பு இழையிவினை யூக்கிகளின் பிணையைத் தடை செய்தல். 2. பரிவு நரம்புகளால் பழங்கப்படும் உறுப்புகளிலும், தன்னியக்கத் தசைகளிலும் உள்ள அசிட்டில் சோலினின் வினையைத் தடை செய்கிற ஒரு வினையூக்கி.