பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

clitoriditis

308

comiphene


கந்தினை (பெண்லிங்கம்) அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

clitoriditis : பெண்கந்து வீக்கம்; அல்குல் வீக்கம் : பெண்கந்தில் (பெண் லிங்கம்) ஏற்படும் வீக்கம்.

clitorimegaly : பெண்லிங்க விரிவாக்கம் : பெண்லிங்கம் விரிவடைந்திருத்தல். ஆண்மையூக்க இயக்குநீரனளவு அளவுக்கு அதிகமாக இருப்பதால் இது உண்டாகிறது.

clitoris : பெண்கந்து (பெண் லிங்கம்); அல்குல்; பெண்குறி : பிறப்பு வாயில் மேட்டுக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய நிமிர்த்தக்கூடிய உறுப்பு.

clitorism : பெண்லிங்கப் பொருமல் : 1. மிகை ஊட்டத்தால் பெண் லிங்கம் பொருமுதல். 2. பெண் லிங்கம் இடைவிடாது எழுந்து நிற்றல்.

clivography : மண்டையோட்டுக் குழி; ஊடுகதிர்ப்படம் : பின்பக்க மண்டையோட்டுக் குழியை ஊடுகதிர்ப்படம் மூலம் பார்த்தல்.

clivus : சரிவுப் பரப்பு : 1. கீழ்நோக்கியச் சரிவான பரப்பு. 2. பின்பக்க மண்டையோட்டுக்குழியில் பின்புறசேணக்குழியில் இருந்து எலும்புப் பெரும்புழை வரையிலுள்ள சரிவான பரப்பு.

cloaca : நிணவெலும்புப் பிளவு : நிணவெலும்பு வீக்கத்தில், சீழ் வெளிப்படுத்தும் மேலுறை வழியாக ஏற்படும் பிளவு.

cloacogenic : நிணவெலும்பு பிளவு சார்ந்த : நிணவெலும்புப் பிளவிலிருந்து தோன்றுகிற.

cloberasol propionate : குளோபெராசோல் புரோப்பியோனேட் : தோல் தடிப்பு (படை) போன்ற நோய்களுக்குத் தோலில் பூசுவதற்குப் பயன்படும் மருந்து.

clofazimine : குளோஃபாசைமின் : தொழுநோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவற்கு வாய்வழி கொடுக்கப்படும் சிவப்பு நிறச் சாயப்பொருள்.

clofibrate : குளோஃபிப்ரேட் : இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் மருந்து. எலும்பு முறிவின்போது கொழுப்பு படியாமல் தடுக்கப் பயன்படுத் தப்படுகிறது.

clomid : குளோமிட் : குளோமிஃபீன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

clomiphene : குளோமிஃபீன் : கருவுறாத பெண்களிடம் கரு அணுவைத் துண்டி, மாதவிடாய் வரவழைத்து, அவர்களின் கருவுறும் திறனை அதி கரிக்கக்கூடிய ஒரு செயற்கைக் கலவைப் பொருள்.