பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coccidium

313

cochlea


இருக்கும். இது வயிற்றுப்போக்கின் போது நீர்த்த சீதத்தை உண் டாக்குகிறது.

coccidium : கோக்கிடியம் : இது ஒர் ஒற்றை உயிரணு ஒட்டுண்ணி. இது மேல்தோல் உயிரணுக்களில் இனப்பெருக்கத்தை உண்டாக்குகிறது.

coccobacillus : கோக்கே பாசில்லஸ் : இது குறுகிய, தடித்த பாக் டீரிய சலாகை. இது முட்டை வடிவில் அல்லது லேசான நீள் வட்டவடிவில் அமைந்திருக்கும்.

coccus : கோளக்கிருமி; வட்ட நுண்ணுயிர்; பரல் நுண்மி : கோள வடிவம் உள்ள நோய்க்கிருமி.

coccydynia : உள்வால் எலும்பு நோவு : உள்வால் எலும்புப் (குத எலும்பு) பகுதியில் ஏற்படும் நோவு.

coccygeal : குத எலும்பு சார்ந்த : உள்வால் எலும்புப் (குத எலும்பு) பகுதி தொடர்பான அல்லது அதில் அமைந்துள்ள.

coccyx : உள்வால் எலும்பு (குத எலும்பு வால் எலும்பு : தண்டு எலும்புக் கண்ணிகளின் கடைசி

cochlea : செவிச் சுருள் வளை; உட்காது சுருள் குழாய்; திரி