பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cobalt blue

312

coccidiosis


சத்தில் இது ஒர் அமைப்பு ஆகும். இரத்த சோகையை இது தடுக்கிறது.

cobalt blue : கோபால்ட் நீலம் : கோபால்ட் என்னும் வெண்ணிற உலோக வகையிலிருந்து எடுக்கப்படும் நீலவண்ணப் பொருள்.

cocaine : கோக்கைன் : கோக்கோ என்ற தென் அமெரிக்கச் செடியின் இலைகளிலிருந்து உண்டு பண்ணப்பட்டு, உடற் பகுதியை உணர்ச்சி இழக்கச் செய்யும் மருந்துப் பொருள்.

cocainism : கோக்கைன் கோளாறு : மரத்துப்போகச் செய்யும் கோக்கைன் மருந்து வகை அளவுக்கு மீறிப் பயன்படுத்தப் படுவதால் உண்டாகும் கோளாறு.

cocarcinogen : கோகார்சினோஜன் : தானே புற்று நோயை உண்டாக்காமல், புற்று நோயை உண்டாக்குகிற ஒரு பொருளின் வினையை ஊக்குவிக்கிற ஒரு பொருள்.

coccidia : கோக்கிடியா : ஓரணுவின் ஒர் உட்பிரிவு. இதில் முதிர்ச்சி யடைந்த டிராஃபோசோயிட்டுகள் உள் உயிரணுவுடையவை. அதே மூல உயிரில் இனப் பெருக்கமும், சிதல்விதை உற்பத்தியும் நடைபெறுகிறது.

Coccidioides : கோக்கிடியோடிஸ் : ஒரளவு வறண்ட பகுதிகளிலுள்ள மண்ணில் காணப்படும் ஒரு பூஞ்சண வகை.

coccidioidin: கோக்கிடியோடின் : கோக்கிடியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க்கிருமி வளர்ச்சியினால் உண்டாகும் துணைப் பொருள்களை உடைய ஒரு கிருமி நீக்கிய கரைசல். இது தோலடி நோயைக் கண்டறிவதற்கான சோதனையில் பயன் படுத்தப்படுகிறது.

coccidioidoma : கோக்கிடியோடோமா : நுரையீரலில் உள்ள குருணைக்கட்டிக் கரணை இது அடிப்படை நரம்புக் கரணையினைத் தொடர்ந்து ஊடுகதிர் மூலம் காணப்படுகிறது.

coccidioidomycosis : கோக்கிடியோமைக்கோசிஸ் : கோக்கி டியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒரு நோய். இதில், நுரையீரல் கபம் போன்ற நசிவுப்புண் தென்மேற்கு அமெரிக்காவில் பாலை சார்ந்த பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

coccidiosis : கோக்கிடியோசிஸ் : கோக்கிடியா எனப்படும் ஒற்றை உயிரணு ஒட்டுயிரினால் உண்டாகும் தொற்று நோய். இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படாமல்