பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

CMV

311

cobait


வழியே குடல் கழுவுவதற்குப் பயன்படும் கருவியின் வணிகப் பெயர்.

CMV : சி.எம்.வி. : முழங்கால் தண்டு தொடர்பான 'சைட்டோ மெகாலோ வைரஸ் நீமெயில்' (சி.எம்.வி.) என்பதன் சுருக்கம்.

CNS : மைய நரம்பு மண்டலம் (சி.என்.எஸ். : மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) என்பதன் சுருக்கம்.

coaggulutination : ஒன்றுக்கு மேற்பட்ட தனிப் பிணியின் குருதியணுக்களுடன் ஒன்றிணைந்த ஆய்வு மூலங்களின் கூட்டுத் திரட்சி.

coagulant : உறைபொருள் : சிறுகி உறையச் செய்கின்ற ஒரு வினையூக்கி. இது முக்கியமாக இரத்தத்தை உறையச் செய்கிறது.

coagulase : உறை பொருள் : குருதிநீரை (பிளாஸ்மா) உறையச் செய்யும் ஒரு பாக்டீரியா உண்டாக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்) நொதி.

coagulate : உறையச்செய் : 1. கட்டியாக உறையும்படி செய்தல். 2. உறை கட்டியாகச் செய்தல்.

coagulopathy : உறையா நோய் : இரத்தம் உறைவதைப் பாதிக்கிற ஒரு கோளாறு. குருதி நாளத்தினுள் இரத்தம் உறைவதை இது பாதிக்கிறது.

coagulum : உறைவித்த பொருள் : உறையச் செய்யப்பட்ட பொருள்.

coalesce : தோல் திரட்சி : நோய் பாதித்த தோல் பகுதியில் ஏற்படும் திரட்சி.

coalescence : உள்ளுறுப்பு ஒட்டல்.

coalition : கூட்டிணைவு : ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் உறுப்புகளை ஒருங்கு இணைத்தல்.

coapt : இணக்கு : காயத்தின் விளிம்புகளை ஏறக்குறைய இணக்கமாகப் பொருந்தச் செய்தல்.

coarctation : நாள இறுக்கம் : குழாய் அல்லது நாளம் சுருங்கி, குறுகி இறுக்கமடைதல்.

coarse tremor : கடும் நடுக்கம்.

cobalamin : கோபாலமின் : வைட்டமின்-12 தொகுதியின் பொது இனப் பெயர்.

cobalt : கோபால்ட் : வெண்ணிற உலோகவகை. இது அணு எண் 27 உடைய தனிமம். இதனை மிகச் சிறிதளவு உணவில் சேர்த்தால் ஊட்டச்சத்தாக அமையும். வைட்டமின்-B (கோபாலமின்) என்ற ஊட்டச்