பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Colomycin

320

colorimeter


Colomycin : கோலோமைசின் : கோலிஸ்டின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

colon : பெருங்குடல் : குடல் வாலிலிருந்து மலக்குடல் வரை உள்ள பெருங்குடல் பகுதி.

colonization : உடனுண் வாழ்வு : மனித உடலில் கிருமிக்கூட்டம் ஒரே உணவை உண்டு ஒன்றுக்கொன்று உதவி, கூட்டு வாழ்வு நடத்துதல். பிறந்த உடனேயே இந்த உடனுண்ணிகள் பல உண்டாகிவிடுகின்றன. ஆனால் இவை நோய் உண்டாக்குவதில்லை. உடனுண்ணிகளுக்கும் தற்காப்பு அமைப்பு முறைக்குமிடையில் சமநிலையின்மை ஏற்படும் போதுதான் நோய் தொற்றுகிறது.

colonopexy : பெருங்குடல் பிணைப்பு : பெருங்குடலின் ஒரு பகுதியை அடிவயிற்றுச் சுவருடன் தையல் மூலம் பிணைத்தல்.

colony : கிருமிக் கூட்டம்; நுண்ணுயிர்க் குழுமம் : உடலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரிகளின் எண்ணிக்கை பெருகுவதால் உண்டாகும் நோய்க் கிருமிகளின் ஒரு கூட்டம். ஒரு கிருமிக் கூட்டத்தில் கோடிக்கணக்கான தனித்தனி உயிரிகள் அடங்கியிருக்கும்.

colopexostomy : செயற்கைக் குதவாய்த் திறப்பு : பெருங்குடலைச் சீவி நறுக்கி, ஒரு செயற்கை குதவாய் ஏற்படுத்துதல். பெருங்குடலை அடி வயிற்றுச் சுவருடன் பொருத்திய பிறகு பெருங்குடலில் இந்த வாய் திறக்கப்படுகிறது.

colopexy : பெருங்குடல் இணைப்பு : பெருங்குடலின் ஒரு பகுதியை அடிவயிற்றுச் சுவருடன் இணைத்தல்.

colorimeter : நிறமானி : ஒரு திரவத்தின் நிறச்செறிவை அளவிடும் ஒரு சாதனம். (எ-டு) இரத்தத்தில் உள்ள சிவப்பணு நிறமியின் அளவை இது காட்டுகிறது.