பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

compression

325

conception


compression : அழுத்தம்; அழுத்துதல்; அழுத்தப்படும் நிலை; அமுக்கம்; நெருக்கம்; அழுத்தமேற்றல் : உறுப்பினைத் துண்டிக்கும் போது ஏற்படும் உறுப்படியினைச் சுருங்கச் செய்வதற்குக் கம்பளிப்பட்டை அல்லது கட்டுத்துணி கொண்டு இறுகக் கட்டுப்போட்டு அழுத்தம் கொடுத்தல்.

compressor : அழுத்தும் தசை நார்; அழுத்தி : அழுத்தி நெருக்கித் தட்டையாக்குகிற தசைநார்.

compromise : இணக்குவித்தல்; ஏற்பமை : மனத்தின் விழிப்பு நிலையில் அடக்கி வைத்த இயற்கை உணர்வுகளைத் தளரச் செய்து மனப்பூசல்களைத் தவிர்ப்பதற்குரிய உளவியல் செயல்முறை.

compulsion : வல்லந்தம்; வற்புறுத்தல்;விரும்பாச்செயல்;கட்டாயச் செயல்; உள் உந்துகை : அறிவுக்குப் பொருந்தாத ஒரு செயலைச் செய்யும் வலுக்கட்டாயமாகத் தூண்டும் உணர்வு. இந்த உணர்வினை அடக்குவதன் காரணமாக மனவுலைவு அதிகரிக்கும். அந்தச் செயலைச் செய்தாலொழிய இந்த மனவுலைவு நீங்குவ தில்லை.

computed tomography (CT) : கணிப்பொறி ஊடுகதிர் உள்தளப் படமுறை :உடலின் வழியே ஒரு மெல்லிய துணுக்கினை உருக்காட்சியாகப் படமெடுக்கும் கணிப்பொறிமுறை. இது ஒரு சுற்றோட்ட நுண்ணாய்வு இயக் கத்தின் போது சேகரிக்கப் பட்ட ஊடுகதிர் (எக்ஸ்ரே) ஈர்ப்புத் தகவல்களிலிருந்து கிடைக்கிறது.

conation : செயல் துணிவாற்றல்; முனைப்பு : விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளைச் செயற்படத் தூண்டும் மன ஆற்றல்.

concavity : உட்குழிவு : ஒரு பரப்பளவில் ஒரேசீரான வளைவு விளிம்புகளுடன் கூடிய ஒரு பள்ளம்.

conceive : கருவுறுதல் : 1. கருக் கொள்தல். 2. கருத்தில் உருவாக்கு தல். 3. ஒரு கருத்தினை உருவாக்கிக் கொள்தல்.

concept : கருத்துப் படிவம்; கருதுகோள் : ஒரினப் பொருள்களைச் சுட்டும் பொதுக்கருத்து. மரியாதை, அன்பு, ரோஜா மலர், வீடு முதலியன பற்றிய ஒரு தனிநபரின் பொதுக் கருத்து அவருடைய பண்பியல்புகளைப் பிரதிபலிக்கிறது.

conception : கருவுறுதல் (சூலு உறுதல்); கருத்தரிப்பு; சினையாதல்; கருத்தரிவு : கருப்பையினுள் விந்தணுக்கள் பாய்ந்து கருக்கொள்ளுதல்.