பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

conchoscope

326

conditioned reflex


conchoscope : மூக்கு ஆய்வுக் கருவி : முக்கு உட்குழிவினை ஆராய்வதற்கான ஒரு சாதனம்.

conchotome : மூக்கெலும்பு அறுவைக் கருவி : நடுமூக்குச் சுருள் எலும்பினை வெட்டியெடுப்பதற்கான ஒரு சாதனம்.

concoction : மருந்துக்கலவை : வெப்பமூட்டித் தயாரித்த இரு மருந்துப் பொருள்களின் ஒரு கலவை.

concordin : காங்கார்டின் : புரோட்டிரிப்டிலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

concretion : உடற்கட்டி; இறுக்கம்; திரட்சி : சிறு துகள்கள் ஒன்று சேர்ந்து கடினமாகத் திரண்ட பிண்டம். உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் "கல்லடைப்பு" என்ற கல்போன்ற தடிப்பையும் இது குறிக்கும்.

concussion : அதிர்வடி; பேரடி; உட்காயம்; வன்குலுக்கு; நிலை குலைவு : அதிர்ச்சியுறும்படியான பெருந்தாக்குதல். தலை மீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல் வெளிறுதல், உடல் குளிர்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல் அதிகரிக்கக் கூடும். மலம், சிறுநீர் கழிவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்.

condensation : செறிவாக்கம் : 1. பல்வேறு கோட்பாடுகளை ஒன்றாக ஒருங்கிணைத்தல். 2. அடர்த்தியாக்குவதற்காக அழுத்தம் கொடுத்தல். 3. ஒரு திரவம் ஒரு வாயுவாக அல்லது ஒருதிரவம் ஒரு தடப்பொருளாக மாறுதல். 4. பல்லில் உள்ள குழிவுக்குள் நிரப்புப் பொருளைச் செலுத்தி நிரப் பும் பொருள்.

condensation : உறைமானம்; சுருக்கம்; சுண்டுதல்; குவிதல்; திணிதல் :பொருள்கள் கருங்கிச் செறிவடைதல். (எ-டு) ஒரு வாயு சுருங்கி ஒரு திரவமாக மாறுதல்.

condenser : வடிவம் : 1. நீராவிப்பொறியில் ஆவியை நீர்ப் பொருளாக மாற்றுவதற்கான வாலை, 2. பற்குழியினுள் நிரப்புப்பொருளை நிரப்புவதற் கான ஒரு கருவி.

conditioned reflex : கட்டுப்பட்ட அனிச்சைச் செயல் : வழக்கமான நிகழ்ச்சித்தொடர்பு காரணமாக முன் அனுபவத்தை ஒட்டி உள் மனத்தில் இயல்பாக ஏற்படும் எதிர்த்துண்டுதல் குறிப்பு. தனக்கு மணியடித்ததும் உணவு கொடுக்கப்படுவதில் பழகிப் போன ஒரு நாய், உணவு கொடுக்கப்படா விட்டாலும்