பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

coprolagnia

335

core


coprolagnia : இயல்முரணிய பாலுணர்ச்சி : இதில் மலஜலம் பற்றி எண்ணுவதும், அதனைப் பார்ப்பதும்கூட ஒர் இன்ப உணர்ச்சியை உண்டாக்குகிறது.

coprolax : கோப்ரோலாக்ஸ் : டையாக்டில் சோடியம் சல் ஃபோசசினேட் மருந்தின் வணிகப் பெயர்.

coproporphyria : மிகைப்போர்பைரின் போக்கு : ஒருவகை போர்ப்பைரின் வள்ர்சிதை மாற்றப் பிழை. இது ஒரு மரபுக் கோளாறு. இதில் மலஜலங்களில் போர்ப்பைரின் அதிக அளவில் வெளிப்படும்.

coproporphyrin : கோப்ரோ போர்ப்பைரின் : மலஜலத்தில் பொதுவாகக் காணப்படும் இரு போர்ப்பைரின் கூட்டுப் பொருள்களில் ஒன்று. இது பிலிரூபின் என்ற நிறமியின் சிதைவினால் உண்டாகிறது.

coproporphyrinuria : கோப்ரா போர்ப்பைரினுரியா : சிறுநீரில் மலஜல போர்ப்பைரின் மிகையாக இருத்தல்.

coprosterol : குடல் சேர்மானப் பொருள் : பித்தச்சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள்.

copula : இணைப்பு : 1. இரு கட் டமைப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய உறுப்பு. 2. நாக்கின் மேற்கூரையாக அமைந்துள்ள முதிரா நிலைத்தொண்டைத் தளத்தில் உண்டாகும் மிதமான புடைப்பு.

coracoid : முன்கை தோளிணை எலும்பு : முன்கை எலும்புடன் இணையும் தோள்பட்டை எலும்புடன் ஒன்றிணைந்த எலும்பு.

coramine : கோராமைன் : நிகெதமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cordectomy : நாள அறுவை சிகிச்சை : ஒரு நாளத்தை குறிப்பாகக் குரல்வளை அதிர்வு நாளத்தை அறுவைச் சிகிச்சை முறையில் துணித்தல், தொப்புள் கொடியறுப்பு.

cordilox : கோர்டிலோக்ஸ் : வெராப்பாமில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cordocentesis : தொப்புள்சிரைத் துளைப்பு : கருவுயிரின் இரத்த மாதிரியை எடுப்பதற்கு மீயொலி வரைவு வழிகாட்டுதலில் கீழ் தோல்வழித்தொப்புள் சிரைத் துளைப்புச் செய்தல்.

cordotomy : தண்டுவடக்குழாய்ப் பகுப்பு : தண்டு வடத்தின் கிடை மட்ட வடக்குழாயினை பகுத்தல்.

core : உள்மையம்; நடுப்பகுதி; முனை; உட்புறம் : ஒரு கொப் புளத்தின் மையத்திலுள்ள ஆணிப் பகுதி.