பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

correlation

338

corynebacterium


correlation : இடைத்தொடர்பு : ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களை ஒன்றற்கொன்று தொடர்புடைய தாக்கும் ஒரு புள்ளி விவர அடடவணை.

corrigan's pulse : கோரிகான் நாடி : நீர்ச் சம்மட்டி நாடி. அயர்லாந்து மருத்துவ அறிஞர் சர் டொமினிக் கோரிகானின் பெயரால் அழைக்கப்படுகிறது.

corrolant : உடல் வலுவூட்டி : உடல் வலிமையூட்டும் மருந்து.

corrugator : நெளிவான : முகம் சுளிக்கும்போது புருவ சுருக்கு தசை

cortex : மூளை மேலுறை; புறணி; மூடி : மூளையின் மேலுள்ள சாம்பல் நிறப் பொருள்.

cortical : புறஉடல் சார்ந்த : 1, புறணி சார்ந்த 2 உள்ளுரி சார்ந்த மென்மையான எலும்புத் திசுவைச் சுற்றியுள்ள எலும்பு.

corticosterone : அண்ணிரகப் புறணி இயக்குநீர் : அண்ணிரகப் புறணியிலிருந்து சுரக்கும் இயற்கையான குண்டிக்காய் இயக்கு நீர். இது நுரையீரலில் கிளைக்கோஜன் படிவதையும், சோடியம் நிலைபெறுவதையும், பொட்டாசியம் வெளியேறுவதையும் தூண்டுகிறது.

corticosteroids : குண்டிக்காய் இயக்குநீர் : குண்டிக்காய்ச் சுரப்பி மேலுறையில் உண்டாகும் இயக்கு நீர்கள் (ஹார்மோன்).

corticotropin : புறக் கபச் சுரப்பு நீர் : புறக்கபச் சுரப்பியில் சுரக்கும் இயக்குநீர். இது குறிப்பாகக் குண்டிக்காய் மேலுறை இயக்கு நீரைச் சுரக்கத் துண்டுகிறது.

cortisol : கோர்ட்டிசால் : மனிதரிடமுள்ள முக்கியமான குளுக்கோ கார்ட்டிக்காய்ட் இதன் அளவு, காலையில் எழுந்தவுடன் மிக அதிகமாகவும், நள்ளிரவில் மிகக் குறைவாகவும் இருக்கும். மன அழுத்தத்தின் போதும், நோயின்போதும் இதன் அளவு அதிகரிக்கிறது. இதன் 95% புரதத்துடன் பிணைந்திருக்கும். சுதந்திர மாகவுள்ள சிறிதளவு, உயிரியல் முறையில் மிகவும் செயலூக்கமுடையதாக இருக்கும். இது குளுக்கோகார்ட்டிக்காய்ட் ஏற்பிகள் மூலமாகச் செயற்படுகிறது.

cortisone : கார்ட்டிசோன் : குண்டிக்காய்ச் சுரப்பியில் சுரக்கும் இயக்குநீர்களில் (ஹார்மோன்) ஒன்று. இதனை உடல் பயன் படுத்துவதற்கு முன்பு கார்டிசாலாக மாற்றிக் கொள்கிறது. -

corynebacterium : கோரினிபாக்டீரியம் : கோரினிபாக்டீரியேசியே என்ற பாக்டீரியக் குடும்பத்தைச் சேர்ந்த சலாகை வடிவிலான கிராம் நேர் படிவ வகை. இது தொண்டை அழற்சிநோயை உண்டாக்குகிறது.