பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cranialis

342

Cream


cranialis : கபாலம் சார்ந்த : மண்டை யோடு (கபாலம்) அல்லது உடம்பின் உச்சிப்பகுதி தொடர்புடைய.

cranial Index : மண்டையோட்டுக் குறியெண்; தலைசார் : நீளத்தின் நூறுவீதமாகக் கணிக்கப்படும் மண்டையோட்டின் வடிவளவு வரைக் குறியெண்.

cranial vault : மண்டையோட்டுக் கவிகை : முதிர் கருமண்டை யோட்டின் நகரக்கூடிய பகுதியாக முன்பக்க, உட்பக்க, பின்புற எலும்புகள் அமைந்துள்ளன. இவை குழந்தை பிறக்கும் போது வெளிவருவதற்கு பிறப்பு வழியை நெகிழச் செய்து வழி உண்டாக்கிக் கொடுக்கின்றன.

crani ofenestra : மண்டையோட்டுத் திரிபு : கருமுனை மண்டையோடு திரிபாக வளர்ந்திருத்தல். இதில் சில பகுதிகளில் எலும்பு உருவாகாமலிருக்கும்.

craniogromy : மண்டையோட்டியல் : மண்டையோடு சார்ந்த புற உடலமைப்பு ஆய்வியல்.

craniolacunia : மண்டையோட்டுப் பள்ளம் : கருமுனை மண்டையோடு திரிபாக வளர்ந்து இருத்தல். இதில் உட்புறப் பகுதிகள் பள்ளங்கள் இருக்கும்.

craniometer : மண்டையோட்டுமானி : மண்டையோட்டை அளக்கும் கருவி.

craniometry : மண்டையோட்டு அளவியல்; தலையளவு : மண்டை யோடுகளை அளவிடும் அறிவியல்.

craniopharyngioma : மண்டையோட்டுக் கட்டி : மூளைக்கும் கபச்சுரப்பிக்குமிடையில் உண்டாகும் கட்டி.

cranioplasty : மண்டையோட்டு அறுவைச் சிகிச்சை : மண்டை யோட்டில் ஏற்படும் குறைபாடுகளை அறுவைச் சிகிச்சை செய்து குணப்படுத்துதல்.

craniorhachischisis : முதுகெலும்புப் பிளவு : மண்டையோடும் முதுகெலும்பும் பிறவியிலேயே வெடித்துப் பிளவு பட்டிருத்தல்.

craniotomy : இளம் மண்டையோட்டு மருத்துவம்; மண்டைத் திறப்பு; தலைத்திறப்பு : இளஞ்சூலின் மண்டையோட்டைத் தகர்த்துக் கூறுபடுத்துதல்.

cranium : மண்டையோடு; மண் டைக்கூடு; கபாலம் : மூளையை முடியுள்ள எலும்புகளின் தொகுதி.


crasnitin : கிராஸ்னிட்டின் :' கொலாஸ்பாஸ் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

crassamentium : இரத்தவுறைவு : உறை குருதியின் அடர் பகுதி , உறைந்த இரத்தக் கட்டி.

cream : பாலேடு : 1. பாலின் மேற்பரப்பில் படலமாகப் படர்ந்திருக்கும் கொழுப்புச் சத்துடைய பாலேடு, 2. வெப்ப மண்டலத்தில் பயன் படுத்துவதற்கான எண்ணெயும் நீரும் கலந்த ஒரளவு திட வடிவிலான பசைக் குழம்பு.