பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

countertraction

341

crampy


காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கறை உண்டாக்கும் பொருள்.

countertraction : எதிர் இழுவை : எலும்பு முறிவைக் குறைப் பதற்காக, ஒரு இழுவைக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் இன்னொரு இழுவை.

couplet : இரட்டை : அடுத்தடுத்த முதிராக் கீழறைச் சுருக்கங்களின் இரட்டைகள்.

couvade : போலி நோய் : பழங்குடி மக்களிடையே மனைவியின் பேறுகாலத்தில் கணவன் மேற்கொள்ளும் போலி நோய்.

cowperitis : துவர்சுரப்பி அழற்சி : துவர் சுரப்பியில் ஏற்படும் வீக்கம், மலக்குடலுக்குள் சுட்டு விரலைவிட்டு, இவற்றில் ஒன்றின் மீது கட்டைவிரலை முதலில் வைத்து, பிறகு ஆசனவாயின் நடுமடிப்பிலும் வைத்து இது உணரப்படுகிறது.

cowper's glands : துவர் சுரப்பியில்.

coxa : இடுப்பு; சப்பை : இடுப்பு முட்டு.

cowpox : கோவசூரி/மாட்டம்மை : பசுக்களின் மடுக்காம்புகளைப் புண்ணாக்கும் நோய்வகை. இது பசுக்களிடமிருந்து மனிதருக்கும் பரவக்கூடும்.

coxalgia: இடுப்புவலி; சப்பைவலி : இடுப்பு மூட்டில் ஏற்படும் நோவு.

coxiella : காக்சியெல்லா : கணைச் சூட்டு நோயை உண்டாக்கும் ஒருவகைப்பாக்டீரியா, அமெரிக்கப் பாக்டீரியாவியலறிஞர் செஹரால்டு காக்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது. காக்சியெல்லா பர்னெட்டி என்ற பாக்டீரியா, ஆடுமாடுகளிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் கியூ- காய்ச்சல் என்ற நோயை உண்டாக்குகிறது.

coxitis : இடுப்பு வீக்கம்; இடுப்பு அழற்சி; சப்பை அழற்சி : இடுப்பு மூட்டில் ஏற்படும் வீக்கம்.

crackie : வெடிப்பொலி : மூச்சுச் சிற்றறைகளிலும் மையம் நோக்கிய முனைகோடி காற்று வழிகளிலும் சிலசமயம் உட்குழிகளிலும் விட்டுவிட்டு உண்டாகும் வெடிப்பொலிகள்.

cradle cap : குழந்தைக் குல்லாய்; தொட்டில் தொப்பி : குழந்தை களுக்கு உச்சி வட்டக்குடுமித் தோலில் உண்டாகும் செதிள்.

cramp : சுளுக்கு; பிடிப்பு; தசை நார்ச் சுரிப்பு' தசை மரத்தல்; சூரை பிடித்தல்; தசை இசிவு; பிடியிறுக்கம் : கடுங்குளிரினால் அல்லது மட்டு மீறிய தளர்ச்சியினால் உண்டாகும் தசைநார் இசிப்பு. இது, முறை நரம்பிசிவு, உணவு நச்சு, வாந்திபேதி (காலரா) போன்ற நோய்களின்போது உண்டாகலாம்.

crampy : சுளுக்கான : சுளுக்கால் பீடிக்கப்பட்ட சுளுக்குப் பிடிப்பு நோயை உருவாக்கத்தக்க.