பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cryoprobe

346

crystalline


வெப்பநிலையில் பெரும்பாலும் திரவ நைட்ரஜனில் உயிரணுக்களைப் பாதுகாத்தல்.

cryoprobe : உறை ஆய்வுக் கருவி; குளிரூட்டுக் கருவி : உயிர்ப்பொருள் ஆய்வுக்குப் (biopsy) பயன்படும் கருவி. இது, திரவ நைட்ரஜன் கருவியுடன் இணைக்கப்பட்ட நெகிழ்திறனுடைய உலோகக் குழாய் ஆகும். இதன் முனைகள் பல்வேறு அளவுகள் உள்ளன.இந்த முனையை -180°C வரைக் குளிர்விக்கலாம்.

cryoprotein : குளிர்நிலைப்புரதம் : ஒரு கரைசலைக் குளிர்விக்கும் போது வீழ்படிவாகப் படிந்து, சூடாக்கும்போது மீண்டும் கரைகிற ஒரு புரதம்.

cryostat : தாழ் குளிர்சாதனம் : உறைநிலைக்கும் குறைந்த வெப்பநிலையில் செயற்படக் கூடிய குளிர்சாதனம்.

cryosurgery : உறை அறுவை மருத்துவம்; குளிரூட்ட அறுவை முறை; குளிர் அறுவை : நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது.

cryothalamectomy : குளிர் நிலை அறுவை மருத்துவம் : அபரிமிதக் குளிர்ச்சியை பயன்படுத்தி மூளை நரம்பு முடிச்சின் ஒரு பகுதியை அழித்தல்.

cryotherapy : குளிர் மருத்துவம் : குளிர்ச்சியைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்தும் முறை.

cryptogenic அறியாத நோய்க் காரணம்; கானல் கரு.

cryptorchism : அண்ட இறக்கமின்மை; இறங்கா விரை; மறை விரை :உயிரின விதைப்பையினுள் (அண்டகோசம்), விதை (அண்டம்) இறங்காமலிருக்கிற ஒரு வளர்ச்சிக் குறைபாடு. விதைகள் அடிவயிற்று அல்லது தொடை அடிவயிற்று இணைப்புக் குழாயிலே இருந்து விடுகின்றன.

cryptosporidiosis : கடும் வயிற்றுப்போக்கு : கடுமையான வயிற்றுக் கழிச்சலுடனும், அடி வயிற்றுத் தசைச் சுரிப்புடனும், காய்ச்சலுடனும் உண்டாகும் வயிற்றுப்போக்கு நோய். இது கிரிட்டோஸ் போரிடியம் என்னும் ஒரணுக் கிருமியினால் உண்டாகிறது.

cryptosporidium : கிரிப்டோஸ் போரிடியம் : மனிதர்களிடமும் வீட்டு விலங்குகளிடமும் குடலில் காணப்படும் கோளவடிவ ஒரணுக் கிருமி. இது காய்ச்சல், கடும் வயிற்று வலியுடனான வயிற்றுக் கழிச்சலை உண் டாக்குகிறது.

crystalline : பளிங்குப் பொருள் : 1. பளிங்கு போன்று தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய பொருள். 2. பளிங்குப் பொருள்கள் தொடர்புடைய.