பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

D

daboya : கண்ணாடி விரியன் : கொடிய நச்சுக் கொண்ட பாம்பு இனம்.

Dacosta syndrome : இதய நரம்புக் கோளாறு : மிகுதியான இதயத்துடிப்பும் இடது பக்க நெஞ்சில் வலியும் ஏற்படும் இதயக் கோளாறு.

dacry oadenalgia : கண்ணீர்ச் சுரப்பி வலி : கண்களில் உள்ள கண்ணீர்ச் சுரப்பியில் வலி ஏற்படுதல்.

dacryadenectomy : கண்ணீர்ச் சுரப்பி அகற்றல்; கண்ணிர்ச் சுரப்பி நீக்கம் : கண்ணீர்ச் சுரப்பியை சிறு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விடுதல்.

dacryoadenitis : சுரப்பி வீக்கம்; கண்ணீர்ப்பை அழற்சி : கண் கடையிலுள்ள கண்ணீர்ச் சுரப்பியில் ஏற்படும் வீக்கம். சோர்ந்து செயலற்றிருக்கும் போது இது உண்டாகலாம்.

dacryoblennorrhea : கண்ணீர்ப்பைச் சளி ஒழுக்கு : கண்ணிர்ப் பையிலிருந்து சளி வெளியேறுதல்.

dacryocystorhinostomy : கண்ணீர்ப்பை-நாசி வழித் திறப்பு : மூக்கினுள் கண்ணீர் வடிய அறுவை மருத்துவம். முக்குக் கண்ணீர் நாளத்தில் தடங்கல் ஏற்படும் பொழுது, கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து மூக்கினுள் கண்ணீர் வடியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் அறுவை மருத்துவம்.

dacryocyst: கண்ணீர்ப்பை : கண் கடையலுள்ள கண்ணீர்ப்பையைக் குறிக்கும் பழைய சொல்.

dacryocystectomy : கண்ணீர்ப் பை அறுவை மருத்துவம்; கண் ணிர்ப்பை நீக்கம் : கண்ணீர்ப் பையின் எந்தப் பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

dacryocystitis : கண்ணீர்ப்பை அழற்சி : கண்ணீர்ப்பையில் உண்டாகும் வீக்கம். இதனால் கண்ணீர் நாளங்கள் அடைப்படுகின்றன.

dacrocystography : கண்ணீர் நாள ஊடுகதிர்ப்படமெடுத்தல்; கண்ணிர்ப்பை வரைவியல் : கண்ணீர் வழியும் நாளத்தை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் படம் எடுத்து ஆராய்தல்.